Page last updated at
7/26/2010 11:31:51 PM IST
நிலம் மக்களின் உரிமை : பகுதி 7 - வளர்ச்சியும் சாதியும் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு
Economic imbalance in India and its reasons
முதல் பகுதி |
இரண்டாம் பகுதி
முன்றாம் பகுதி |
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி |
ஆறாம் பகுதி
"...............இன்றைய நிலையில் சாதியும் வர்க்கமும் தனித்தனியானவையாக இருந்த போதிலும் எளிய முதலாளித்துவ உற்பத்திமுறை மட்டுமே மேலோங்கியுள்ளது என்று நாம் கூறி வருகின்றோம். காரணம் என்னவெனில் காலனிய ஆட்சியின் கீழ் உருவான முதலாளித்துவ உற்பத்தி முதலாளித்துவமனது புதிய வர்க்கங்களை ( தொழிலாளர், பூர்ஷ்வா ) மட்டும் உருவாக்கவில்லை, வர்க்க கட்டுமானத்திலிருந்து சாதிய முறையை பிரித்தெடுக்கும் ஒரு நடவடிக்கையும் மேற்கொண்டது. ஒரு வகையில் இது சாதியை ஒரு புதுவகைப்பட்ட சமூகநிகழ்வாக மறுவிளக்கம் தருவதும், மறுவடிவம் கொடுப்பதும் ஆகும். மேலாண்மை கொண்டிருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழ் சாதியானது மறுஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்றைய நிலையில் சாதியும், வர்க்கமும் கலந்த ஒரு சிக்கலான கலப்பை நாம் இன்று சந்திக்கிறோம்...............'' (கெய்ல் ஓம்வெட் - வர்க்கம், சாதி, நிலம் பக் 65-66)
இத்தகைய இந்திய சமூகத்தை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டுமெனில் ஆளும் அரசின் தன்மையை புரிந்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசு என்பது ஏதோ சுதந்திர இந்தியாவில் திடும் என உருவகம் கொண்டது அல்ல. இந்திய சமூகத்தின் எச்சமாய் அதன் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு பழயன மற்றும் புதியனவைகளை உள்ளடக்கி செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் ஆகும். அதாவது இந்திய நிலபிரபுக்களை சமரசம் செய்துக்கொண்டே முதலாலித்துவ வளர்ச்சியை நிகழ்த்திக்காட்டிய விசித்திரத்தை நிகழ்த்திய கட்டமைப்பை கொண்டதாகும். ஆனால் உலகின் மனிதகுல வரலாறு இதுவல்ல. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பிரதான பொது உடமை சமூகம், ஆண்டான் அடிமைசமூகம், நிலபிரபுக்கள் பண்ணை அடிமை சமூகம், தொழிற்புரட்சியினால் உருவான முதலாளி தொழிலாளி, இந்த வர்க்க கூர்மையினால் ஒரு மேம்பட்ட சமூக அமைப்பான சோசலிசம் என்று வளர்ச்சி அடைந்தது. அதாவது முதலாளித்துவத்தின் சாம்பலின் மீது தொழிலாளி வர்க்கம் எழுந்து நின்று சோசலிச சமூகத்தை படைத்து மகிழ்ந்தது. ஆனால் இந்தியாவில் சாதி என்ற கட்டமைப்பு வர்க்கத்தை தன்னுள் செரித்ததால் நிலபிரப்புத்துவத்தை சமரசம் செய்துக்கொண்டு முதலாளித்துவம் வளர்ந்த்து. எனவே இங்குள்ள நிலபிரபுத்துவ முதலாளித்துவ வளர்ச்சியில் சாதி முக்கிய பங்குவகித்தது. ஆகவே... இந்திய முதலாளித்துவ வளர்ச்சியில் கூட எந்த சாதியை சார்ந்த முதலாளிகள் வளர்ந்தனர் அல்லது வளர்கின்றனர் என்பது கவனிக்கப்படவேண்டியது. சமூகத்தின் பொது வெளியில் மீண்டும் மீண்டும் விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் கருத்து உண்மையானதுதான? சுதந்திர இந்தியாவில் தலித் மக்களுக்கு என்ன குறைச்சல், எல்லா சலுகைகளும் கிடைக்கிறதே என்று அங்கலாய்ப்பவர்கள் பார்க்க மறுப்பது எதை என்ற கேள்வி முக்கியமானது. இடஒதுக்கீட்டில் பயன் அடைபவர்கள் தலித்துகள்தானே என்றும். இந்த இட ஒதுக்கீடால் பயனடைவது அவர்கள்தான் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. "உங்களுக்கு என்னப்பா? கொஞ்சம் மார்க் எடுத்தாலும் சீட் கிடைத்திடும்" என்கிற வார்த்தையில் இருக்கும் குதர்க்கம் இடஒதுக்கீட்டை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இட ஒதுக்கீட்டால் பயனடைந்த தலித்துகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக தோன்றினாலும், இவற்றில் 95 சதம் இடங்கள் ஏதோ ஒருவகையில் உடல் உழைப்பை செய்ய வேண்டிய 'டி', 'சி' பிரிவுகளில்தான் உள்ளது. இட ஒதுக்கீடு இல்லை என்றால் கூட தலித் மக்கள் இந்த வேலைகளில்தான் நுழைந்தது இருப்பார்கள். எதற்கு விவாதம். கணக்கை பார்ப்போம். சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியின் தூதுவர்களாக ஆட்சியாளர்களால் கொண்டாடப்படும் முதலாளிகளின் பட்டியலில் எத்துனை தலித்துகள் இருக்கிறார்கள் என பார்ப்போம்.....?
இந்திய நாட்டின் முதலாளிகள் சுதந்திரம் அடைந்தபோது வைத்திருந்த சொத்துகள் இன்று ஆயிரம் மடங்காக வளர்ந்துள்ளது. இந்தியாவின் குறிப்பிட்ட சில முதலாளிகளின் சொத்து மதிப்பு பத்து லட்சம் கோடியை கடக்கிறது. (அதாவது 2009-2010 இந்திய நாட்டின் பட்ஜெட் அளவை தாண்டிய பணம் இது) லட்சுமி மிட்டலோ அல்லது அம்பானிகளோ வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவது இந்திய நாட்டின் பெருமையாக நமது நாட்டின் பிரதம மந்திரியும் சிதம்பரம் வகையராக்களும் பேசுகிற காலம் இது. அவர்கள் அந்த போட்டியில் வெற்றிபெற நாடே அவர்கள் பின்னால் நிற்பதாக இவர்கள் பேசுவார்கள். ஆனால் வறுமையில் தற்கொலை செய்துக்கொள்ளும் நாட்டின் சாதாரண மக்கள் இவரக்ள் கண்களுக்கு தெரியமாட்டார்கள். ஆனால் தலித் மக்கள் கையிலிருந்த கொஞ்சம் நிலங்களும் பறிபோவதை பற்றி இவர்களுக்கு கவலையில்லை.. இவர்களுக்கு மட்டுமில்லை நமக்கும்தான். சரி பட்டியலிடுவோம்.
1. பார்த்தி ஏர்டெல் நிறுவனம் - சுனில் மிட்டல் (தலைவர்-பனியா)
2. கிரேசியம் அண்டு ஹிண்டால் கோ - குமார் மங்கலம் பிர்லா (பனியா)
3. எச்.டி.எப்.சி. - தீபக் பரேக் (பனியா)
4. இந்துஸ்தான் யூனிலீவர் - நித்தின் பரான்ஜிபே (பார்ப்பனர்)
5. அய்.சி.அய்.சி.அய். வங்கி - கே.வி. காமத் (பார்ப்பனர்)
6. ஜெய் பிரகாஷ் அசோசியேட் - யோகேஷ் கவுர் (பார்ப்பனர்)
7. எல் அண்ட் டி - ஏ.எம்.நாய்க் (பார்ப்பனர்)
8. என்.டி.பி.சி. - ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
9. ஓ.என்.ஜி.சி. - மற்றொரு ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
10. ரிலையன்ஸ் குழுமங்கள் - முகேஷ் மற்றும் அனில் அம்பானி (பனியா)
11. ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா - ஓ.பி.பட் (பார்ப்பனர்)
12. ஸ்டெர்லைப் இன்டஸ்ட்ரிஸ் - அனில் அகர்வால் (பனியா)
13. சன்பார்மா - திலிப் சங்வி (பனியா)
14. டாட்டா ஸ்டீல் - பி.முத்துராமன் (பார்ப்பனர்)
15. பஞ்சாப் நேஷனல் பாங்க் - கே.சி. சக்ரபர்த்தி (பார்ப்பனர்)
16. பாங்க் ஆப் பரோடா - எம்.டி. மல்லியா (பார்ப்பனர்)
17. கனரா வங்கி - ஏ.சி. மகாஜன் (பார்ப்பனர்)
18. இன்ஃபோசிஸ் - கிரிஸ். கோபாலகிருஷ்ணன் (பார்ப்பனர்)
19. டி.சி.எஸ். - சுப்பிரமணியன் ராமதுரை (பார்ப்பனர்)
விமானத் துறை
20. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் - விஜய்மல்லய்யா (பார்ப்பனர்)
21. ஜெட் ஏர்லைன் - நரேஷ் கோயால் (பனியா)
தகவல் தொடர்பு
22. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் - அம்பானி (பனியா)
23. ஏர்டெல் - மிட்டல் (பனியா)
24. வோடாஃபோன் எஸ்சார் - டுயா (பனியா)
25. அய்டியா - பிர்லா (பனியா)
26. ஸ்பைஸ் - மோடி (பனியா)
27. பி.எஸ்.என்.எல். - குல்தீப் கோயால் (பனியா)
28. டாட்டாவின் டி.டி.எம்.எல். - கே.ஏ. சவுக்கார் (பார்ப்பனர்)
29. கிரிக்கெட் அமைப்பு - லலித் மோடி (பனியா) தற்போதல்ல
நாளேடுகள்
30. டைம்ஸ் ஆப் இந்தியா - ஜெயின்
31. இந்துஸ்தான் டைம்ஸ் - பிர்லா (பனியா)
32. தி இந்து - கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் (பார்ப்பனர்)
33. இந்தியன் எக்ஸ்பிரஸ் - கோயங்கா (பனியா)
34. ஜி - டி.வி. - சுபாஷ் சந்திரா கோயல் (பனியா)
35. தைனிச் ஜெக்ரான் (இந்தி நாளேடு) - குப்தா (பனியா)
36. திவ்யா பாஷ்கர் (இந்தி நாளேடு) - அகர்வால் (பனியா)
37. குஜராத் சமாச்சார் (குஜராத்தின் மிகப்பெரும் நாளேடு) - ஷா (ஜெயின்)
38. லோக்மத் - மராத்திய நாளேடு - தார்தா (ஜெயின்)
39. நவபாரத் டைம்ஸ் - கோத்தாரி (ஜெயின்)
40. ராஜஸ்தான் பத்ரிக்கா - கோத்தாரி (ஜெயின்)
41. அமர் உஜ்ஜாலா - மகேஷ்வரி (பனியா)
எஃகு உற்பத்தி
42. இந்துஸ்தான் - பிர்லா (பனியா)
43. எஸ்ஸார் (ஸ்டீல் உற்பத்தி) - ரூயா (பனியா)
44. அர்சிலோர் மிட்டல் - லட்சுமி மிட்டல் (பனியா)
45. இஸ்பெட் - மிட்டல் (பனியா)
46. புஷன் ஸ்டீல் - சிங்கால் (பனியா)
47. விசா ஸ்டீல் - அகர்வால் (பனியா)
48. செய்ல் (அரசு நிறுவனம்) - தலைவர் எஸ்.கே. ரூன்த்தா (பனியா)
49. லியாட் ஸ்டீல் - குப்தா (பனியா)
சிமெண்ட் நிறுவனங்கள்
50. அம்புஜா - நியோட்டியா மற்றும் ஷெச்சாரியா (பனியா)
51. டால்மியா சிமெண்ட் - (பனியா)
52. உட்ட்ராடெக் மற்றும் விக்ரம் சிமெண்ட் - பிர்லா (பனியா)
53. ஜெ.கே. சிமெண்ட் - சிங்காரியா (பனியா)
54. இந்துஸ்தான் மோட்டார் - பிர்லா (பனியா)
55. பஜாஜ் ஆட்டோ - (பனியா)
(பட்டியலுக்கு நன்றி - தமிழ் தேசியம் மாத இதழ்)
இந்த பட்டியலில் ஒரு தலித்கூட இல்லை என்பதை எப்படி புரிந்துக்கொள்வது? தலித்துகளை தவிர அனைவரும் "உழைப்பால் உயர்ந்த உத்தமர்களார்" இருப்பது எப்படி? வாய்புக்கள் அனைவருக்கும் சமமானதாக கிடைத்ததா? இந்த வளர்ச்சியில் சாதியின் பங்கு என்ன? என்பவைகள் எல்லாம் முக்கியமானவை. முதலாளித்துவ வளர்ச்சிக்கு முந்தய இந்தியாவில் நிலம் யார் கையில் இருந்தத்தோ அவர்களே முதலாளித்துவ வளர்ச்சியில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்தது. அடிமை உழைப்பாக தலித் மக்கள் உழைப்பை சுரண்டியவர்கள் தங்களுக்கு கிடைத்த உபரியில் சுகபோகமாக வாழ்ந்தனர். இதற்கிடைடில் வந்த தொழிற் புரட்சி இந்திய சமூகத்தையும் அதிர வைத்தது. வரும் புதிய வாய்ப்புகளை நிலவுடமை சமூகம் தனக்கானதாக மற்றியது.
ஏற்கனவே நிலஙக்ளை விட்டு வெளியே நிறுத்தப்பட மக்கள் இந்த புதிய பரிமாணத்திலும் உள்ளே இணைத்துக்கொள்ளப்படவில்லை. முதலாளித்துவ வளர்ச்சியில் சாதி உதிர்ந்து போகும் என்ற நம்பிக்கை பொய்யானது. இந்திய சமூகத்தில் முதலாளித்துவ வளர்ச்சியே சாதியை அடிப்படையை கொண்டதானது. எனவேதான் அந்த அடிப்படையை தகர்க்கும் நிலம் இன்னும் தலித் மக்கள் கையில் வராமல் இருக்கிறது. ஒரு வர்க்க போராட்டம் நடக்காமல் நிலம் உழைப்பவர்கள் கைகளுக்கு வராது. அப்படி வர்கப்போராட்டம் நடக்கவேண்டுமெனில் தொழிலாளி வர்க்கம் ஒன்று திரள வேண்டும். தொழிலாளி வர்க்கம் ஒன்று திரள சாதி மிகப்பெரும் தடையாய் நிற்கிறது. இததைகைய சூழலை பயன்படுத்திக்கொண்டு மேலும் மேலும் நிலசுரண்டல் தமிழகம் உள்ளிட்ட நாடுமுழுவதும் நடக்கிறது....
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :