Page last updated at
7/13/2010 10:56:02 PM IST
மதம் : மனிதனுக்கா? யானைகளுக்கா? - சண்முகானந்தம்
மதம் : மனிதனுக்கா? யானைகளுக்கா?
மதம்- மக்களை மயக்கும் அபின் என்றார் மார்க்சிய அறிஞர் காரல் மார்க்ஸ். இப்புலிபரப்பில் வாழும் உயிரினங்களில் மனிதனை மட்டுமே மதம் என்ற போத தலைக்கேறி ஆறாவது அறிவை சிந்திக்க விடாமல் செய்கிறது.
காட்டுயிர்களில் பேருயிரான யானைகளுக்கு மதம் என்பது அதன்வாழ்வியலில் ஒரு காலநிலை அல்லது முக்கிய நிகழ்வாகவே உயிரியலாளர்களால் கருப்படுகிறது.
15.12.2009- தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் (பாக்: 12) வெளிவந்த செய்தி என்னை வெகுவாக பாதித்துதது. அதன் விளைவுதான் இச்சிறு கட்டுரை. தலைப்பிலேயே மதம் பிடித்த யானை கடைவீதியில் புகுந்து அட்டகாசம் என்ற படி அரைபக்கத்திற்கு நீண்டது.
செய்தியின் சுருக்கம்: தூத்துக்குடி பீர் முகமது சொந்தமான இரண்டு யானைகள் நாகர் கோவில் கொடை விழாவுக்கு சென்று விட்டு, வரும் வழியில் ஒருயானைக்கு "திடீர்" என்று உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் பணகுடியை அடுத்த நெல்லை மாவட்டம் காவல் கிணறு விலக்கில் உள்ள சாஸ்தா கோயிலில் யானைகளை சங்கிலியால் கட்டி போட்டனர். உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த யானை திடீர் என மதம் பிடித்து அருகிலுள்ள கடைகளை சூறையாடியது. போலீஸ்காரர் மற்றும் வியாபாரியை தாக்கியது. அதில் போலீஸ்காரர் படுகாயமுற்றார். வாழைத் தொட்டத்தில் புகுந்து பல சேதப்படுத்தியது.
பணகுடி மெயின் ரோட்டில் வாகனங்களை வழிமறைத்து. அதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. கடைகள் மூடப்பட்டு பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. தகவலறிந்து கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் தாமஸ், அரவிந்த் சம்பவ இடத்திற்கு வந்து, நீண்ட முயற்சிக்கு பிறகு, மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.சங்கிலியால் 4 கால்களையும் கட்டிப் போட்டனர். 15 நாட்களுக்கு யானையை தங்க வைத்து உறை கொடுத்து, இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் யானை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என வன அதிகாரிகள் கூறினார் என அந்த கட்டுரை முடிவுற்றது (தினத்தந்தி 15.12.2009, பாக்: 12 ).
இதில் நாம் கவனிக்கும் முக்கிய அம்சம் என்னவெனில், அதனுடைய இயல்பான சூழலில் வாழும் பேருயிரான யானைகளை பிடித்து பழகி, தெருக்களில் பிச்சை எடுக்க வைப்பது, கோயில்களில் ஆசிர்வாதம் கொடுக்க வைப்பது, தான் இட்ட வேலைகளை செய்ய வைப்பது என மனிதனின் கொடுமைகள் எல்லையில்லமல் நிற்கிறது.
உடுயிரில் பேருயிரான யானைகள் இந்திய அளவில் சற்றேக் குறைய 30,000-ம் தவிர ரகத்தில் 5,000 யானைகளும் இருக்கக்கூடும். அழிவின் விளிம்பில் இருக்கும். யானைகளை பற்றிய சொல்லாடல்கள் காட்டுயிர்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.
மதம்- மனிதனை குறிப்பாக தமிழனை ஒன்றினயை வாடமல் இருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. (சாதியும் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.) உலகில் பல்வேறு நாடுகளில் பரவி இருக்கும் தமிழர்கள், தாங்கள் இருக்கும் நாடுகளில் பல்வேறு இந்துக் கோவில்கள் கட்டி தங்களை இந்து என்பதாகவே காட்டிக் கொள்கிறார்கள். தமிழர்களாக ஒன்றினயை சாதியும். மதமும் மிகப்பெரிய தடையாக உள்ளது. தமிழின் வீழ்ச்சிக்கு இயை இரண்டும் முக்கிய தாரணியாக செயல்படுகிறது.
நிலை இவ்வாறிருக்க, காட்டுரிர்களின் இலக்கணம் புரியாமல் அட்டகாசம், ஆவேசம், மிதித்து கொன்றது எற்ற எதிர்மறை சொல்லாடல்கள் பரபரப்பூட்டும் செய்தியாக பார்க்கப்படுமே தவிர காட்டுயிர்கள் மேல் நெருக்கப் ஏற்படாது என்பது உறுதி.
மதம் என்பது யானைகளின் வாழ்வியலில் ஏற்படும் ஒரு காலநிலை அல்லது இயல்பான ஒரு கட்டம். யானைகளின் கன்னத்துக்கு மேலே அமைந்துள்ள ஒரு சுரப்பியிலிருந்து சுரக்கும் காலங்களில் அந்த யானைகளிடம் காணப்படும் உடலியல் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கை போக்குகளே மனிதரின் பார்வையில் மதம் என்பதாக பார்க்கப்படுகிறது.
மதம் பிடித்த மனிதன் சிந்திக்கும் ஆற்றலை இழந்தான். அறிவியல் பூர்வ அறிவை இழந்தார், ஆனால் மதநிலை காலங்களில் யானைகளின் பாலியில் நடிவடிக்கைகளும், மதநிலை கொண்ட ஆண் யானை மற்ற ஆண் யானைகள் மீது ஆதிக்க போக்கை அதிகமலக்குகின்றன. மதநிலை கொண்ட ஆண் யானைகள் மேல் பெண் யானைகளுக்கு எற்படுமூ கவர்ச்சி கூடுதலைடைகின்றன.
உயிரியியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை, சங்கிலியால் கட்டி போட்ட வளர்ப்பு யானை மதம் பிடித்து கடைகளை சூறையாடியது எற்ற செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வளர்ப்பி யானைகளின் வேதனையும், கொடுமைகளும் புரியும். அதில் மதநிர்ச்சுரப்பி ஆணுக்கும் , பெண்ணுக்கும் இருந்தாலும் குறிப்பாக அந்த ஆண் யானைகளுக்கு ஒரு முறை, அவற்றின் வயதை பொறுத்து சில நாட்களிலிருந்து , சில மாதங்கள் வரை மதநிலை நீடிக்கும், சுரப்பி உள்ள நெற்றிப் பகுதி வீஸ்கி, சுரப்பியின் வழியாக கரிய திரவம் கன்னத்தில் வடியும் இதையே மதநீர் என்கிறோம்.
மதநீர் சுரப்பி வழியாக வேதிப் பொருள் வழி தகவல் பரிமாற்றத்திற்கும் அடிக்கடி கழிக்கப்படும் சிறு நீரும் (மதநிலை காலங்களில்) இது போன்ற தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்படுகிறது.
வளர்ப்பு யானைகள் யாவும் மேற்கூறிய இயல்பு விஷயங்களில் ஈடுபட முடியாமல் சங்கிலியால் பிணைக்கப்படும் போது ஏற்படும் கோபமும், வேதனையும், சங்கடங்களும் புரிந்து கொள்வது சிந்திக் தெரிந்த அனைவரின் கடமையாகும்.
பரபரப்புக்காக மட்டுமே செய்தி வெளியிடாமல் அறிவார்ந்த முறையில் சிந்தித்து நியாயம் உள்ள பக்கம் எழுதுவது ஊடகவியலாளர்களின்கடமையாகும் அப்போது மட்டுமே, யானைகள் உட்பட காட்டுயிர், மனிதர் பிணங்கு மறைந்து காட்டுயிர்கள் மேல் ஆர்வம் ஏற்படும்.
துணை நின்ற நூல் : -
யானைகள் : அழியும் பேருயிர் -ச. முகமது அலி க. யோகனந்த்- மலைபடுகடாம் பக். 82,83,84,
வாசகர் கருத்துக்கள் :
இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :