Page last updated at Thursday, February 04, 2009 at 11:57:28 PM IST

தகவல் தொழில்நுட்ப புரட்சியும் அறிவுச் சொத்துரிமையும் - மு.வெற்றிச் செல்வன்




      Thadagam : On Intellectual Property Rights in Information Technology - Vetriselvan
மு.வெற்றிச் செல்வன்

உலகமயத்தின் மிகப்பெரிய வளர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப புரட்சி குறி்ப்பிடப்படுகிறது. எந்த தொழில் நுட்பமும், அதன் பயன்பாடு மற்றும் அதனை கட்டுப்படுத்தும் அதிகார மையம் எது என்பது கொண்டே அளவிட வேண்டியுள்ளது. உதராணமாக, அனுசக்தியை எடுத்துக்கொண்டால் மக்கள் சார்ந்த அதன் பயண்பாடு என்பது மிகவும் செற்பமே ! ஆனால், அதனை கட்டுப்படுத்தும் அதிகாரமையமாக வல்லரசு கணவில் இருக்கும் பல நாடுகள் உள்ளது. அதுபோல தகவல் தொழில்நுட்ப பயண்பாடும் அதனை கட்டுப்படுத்தும் அதிகார மையத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப புரட்சி, சமூக பெருளாதார பற்றிய அறிவு சிறிதும் இல்லாமல் இரவு நேர வாழ்க்கையை மட்டுமே மையமாக கொண்ட புதிய வர்க்கம் மற்றும் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப புரட்சியை அறிவு சொத்துரிமை சட்டங்களின் (INTELLECTUAL PROPERTY RIGHTS) பின்ணணியில் சற்று ஆராய்வது அதன் பின்ணணியை நமக்கு விளக்க கூடும்.

அறிவு சொத்துரிமை என்பது ஒருவகையான எதிர்மறை உரிமையாகும், அதாவது இவை உரிமை பெற்றவரைத் தவிர்த்து மற்ற அனைவரையும் சில/பல செயல்களை செய்யத் தடைவிதிக்கிறது. அதாவது, ஒரு பொருளுக்கு அறிவு சொத்துரிமை பெற்ற ஒருவர், பிறர் அந்த பொருளை உற்பத்தி/விற்பனை செய்வதைத் தடுக்கும் உரிமையைப் பெறுகிறார்.

அறிவு சொத்துரிமை பல பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. அவற்றில் அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு வழங்கப்படும் காப்புரிமையும் (PATENT), கலை மற்றும் இலக்கியங்களுக்கு வழங்கப்படும் பதிப்புரிமையும் (COPYRIGHT), வணிக (TRADEMARK), பெயர் மற்றும் முத்திரைகளை பாதுக்காக்கும் வணிக குறியீடுகளும் முக்கியமானவை.

உலகமயமும் அறிவு சொத்துரிமையும்:

MICROSOFT நிறுவனம் அதன் கணினி மென் பொருளை அனுமதி இல்லாமல் பலர் பயன்படுத்துவதைத் தடுக்க, உலகெங்கும் பதிப்புரிமை சட்டம் வலுப்படுத்த வேண்டும் என்று எண்ணியது. குறிப்பாக இந்தியா போன்ற ஏழை நாடுகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாகக் அது கருதியது. இதற்கு தீர்வுகான 1980 - களில் MICROSOFT மற்றும் பல அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று கூடி ADVISORY COMMITTEE FOR TRADE NEGOTIATIONS என்ற குழுவை ஏற்படுத்தினர். உலகெங்கும் தங்கள் அறிவு சொத்துரிமை பாதுகாக்கப்பட கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த அறிவுச் சொத்துரிமை சட்டம் அவசியம் என்று இந்த குழு எண்ணியது.

உலகெங்கும் இத்தகைய சட்டங்களை பரப்ப அமெரிக்கா 1987-ல் நடந்த காட் (GATT) மாநாட்டில் வணிகம் தொடர்பான அறிவு சொத்துரிமைக்கான உடன்படிக்கை (TRADE - RELATED INTELLECTUAL PROPERTY RIGHTS AGREEMENT -TRIPS) என்கிற புதிய ஒப்பந்தத்தை முன் வைத்தது. இந்த ஒப்பந்தம் அறிவு சொத்துரிமை சட்டம் எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை காட் ஒப்பந்த உறுப்பு நாடுகளுக்கு அறிவுத்துகிறது. இந்த காட் மாநாட்டில் கலந்துக் கொண்ட இந்தியா, மேற்கூறிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் பின்பு, இந்திய அறிவு சொத்துரிமை சட்டங்களான காப்புரிமை சட்டம் (PATENT ACT 1970), பதிப்புரிமை சட்டம் (COPYRIGHT ACT 1957), வணிக குறியீடு சட்டம் (TRADE MARK 1999), போன்றவற்றில் பலமாற்றங்கள் செய்யப்பட்டன. கூடுதலாக SEMI CONDUCTOR INTEGRATED CIRCUITS LAYOUT - DESIGN ACT, 2000 என்கிற புதிய சட்டமும் இயற்றப்பட்டது.

கணினி உலகும் அறிவு சொத்துரிமையும்:

கணினி உலகின் அணைத்து பகுதிகளும் அறிவு சொத்துரிமையால் கட்டுப்படுத்தப்படுகின்றன. கணினியில் உள்ள எல்லாவிதமான கண்டுப்பிடிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்படுகின்றன.

இதன்படி கணினியில் பயன்படுத்தப்படும் எந்த ஒரு மென்பொருளும் (SOFTWARE PROGRAMME) பதிப்புரிமை பெறத்தக்கவை. அதேபோல மென்பொருளோடு இணைந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்படுகிறது. மேலும் கணிப்பொறியில் இடம்பெறும் மின்பொறி சாதனங்களுக்கு SEMI CONDUCTOR INTEGRATED CIRCUITS LAYOUT - DESIGN ACT கீழாக பதிப்புரிமை வழங்கப்படுகிறது.

இத்தகைய காப்புரிமை / பதிப்புரிமை பெற்ற நிறுவனங்கள் தங்கள் காப்புரிமை / பதிப்புரிமை மீறாத வகையில் தங்கள் நிறுவனங்களின் வணிக குறியீடுகளை முத்திரையிடுகின்றனர். இந்த முத்திரையை வேறுயாரும் பயண்படுத்த முடியாது காரணம் வணிக குறியீட்டு சட்டப்படி இவையும் பாதுகாக்கப்படுகின்றன. இதணை மீறுவோர் தண்டனைக்குள்ளாவர்.

பதிப்புரிமையை, பதிப்புரிமை பெற்ற நபர் தன் வாழ்நாள் முழுவதும் மற்றும் அவர் இறந்த பின் அவருடைய வாரிசுகளுக்கு 60 ஆண்டுகளும் பயன்படுத்திக் கொள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது. அதேபோல் காப்புரிமை சட்டம் 20 ஆண்டுகால காப்புரிமையை உரிமையாளருக்கு வழங்குகிறது. இத்தகைய உரிமைகள், நிறுவனங்களுக்கு ஏகபோக உரிமையாக மாறிவிடுகின்றன.

MICROSOFT, REAL PLAYERS, I TUNES, ADOBE PHOTOSHOP, SAP, MAC OSX, WINZIP போன்ற நிறுவனங்களின் மென்பொருள்களை, ராயல்டி கொடுத்த பின்பே நாம் பயன்படுத்த முடியும். மேலும் இந்நிறுவனத்தின் மென்பொருளை நாம் பயன்படுத்த முடியுமே தவிர அவற்றை மாற்றுவதையோ மேம்படுத்துவதையோ, பகிர்ந்து கொள்வதையோ பதிப்புரிமை சட்டம் தடை செய்கிறது. ஆக இத்தகைய நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் உலகில் கணினி இயங்காது என்பது தான் இதன் பொருள்.

இதற்கு மாற்றாக LINUX, FIREFOX, THUNDER BIRD, ERP 5, CLAMVIN ANTIVIRUS, GOOGLE CHROME போன்ற மென்பொருள்கள் எவ்வித கட்டுப்பாடு இன்றி அனைவராலும் பயன்படுத்தப்படும் வகையில் கிடைக்கின்றன. இத்தகைய மென்பொருள்கள் Copyleft என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த வகை மென்பொருள் பயன்படுத்துவோரே, தங்கள் தேவைக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த மென்பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆக, தொழில்நுட்பதிற்கு நாம் கட்டுப்பட்டு இருக்காமல்

அதனை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இத்தகைய மென்பொருள்களே உதவும். கேரள மாநில அரசு இதுபோன்ற மென்பொருளை அரசு நிறுவனங்களில் பயண்படுத்த ஆணையிட்டுள்ளது.

முடிவாக இவை நமக்கு தெரிவிப்பது, தகவல் தொழில் நுட்பம் பெருவாரியாக கணினி, மென்பொருள் போன்றவற்றை நம்பியே உள்ளது, இத்தகைய மென்பொருள்களை நிறுவனங்கள் தங்கள் பிடியில் வைத்துள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப உலகம், இன்று சில நிறுவனங்களின் ஏகபோக உரிமையாக மாறியுள்ளது. அதற்கு மேற்கூறிய சட்டங்கள் துனைபுரிகின்றன.

அறிவு என்பது அனைவருக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும், அத்தகைய சட்டங்களே சமுக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். இதற்கு ஏற்ப அறிவு சொத்துரிமைகள் மாற்றப்பட வேண்டும் என்பதே நம் எதி்ர்பார்ப்பு.

மு.வெற்றிச் செல்வன் M.L (IPR)

vetri@just-law.org (mailto:vetri@just-law.org)





வாசகர் கருத்துக்கள் :





இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :


உங்கள் பெயர்
 

மின்னஞ்சல் முகவரி
 

கருத்துரையுங்கள்
 
  Use ( CTRL + g ) to Switch between English and Tamil
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

      
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதையும் படிங்க !
Secondary 2

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!



மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு தொடர்ந்து படிக்க...
Secondary 1

தண்ணீர், தண்ணீர்.,



கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும். தொடர்ந்து படிக்க...
Secondary 2

தொன்மம் தேடியலையும் காந்தக் கல்லின் பாடல்



"உங்க வீட்டு பொண்ணுங்களோட படங்களைக் கொடுங்கள். பிரா ஜட்டியோடு நான் வெளியிடுகிறேன்" நடிகர் விவேக். தொடர்ந்து படிக்க...
<