தலை முடி (மயிர்) பாதுகாப்பு மருந்துகள்

ஜி. ஜெ. பார்த்தசாரதி



அழகு என்பதின் முதல் துவக்கமாகி ‘’தலைமுடி‘’ உள்ளது, பின்புதான் கண், மூக்கு பற்கள் போன்றவை. சங்க கால தமிழ் வீரர்கள் சடை வளர்த்து வெற்றியின் அடையாளமாகி தலையில் பூச்சூடி மகிழ்ந்தனர்.

ஆனால் இன்றோ ஆணோ, பெண்ணோ தலையில் வழுக்கை, முடி கொட்டுதல் போன்றவை சரி செய்ய தனி வருமானத்தில் குறிப்பிடதகுந்த அளவில் செலவழிக்கின்றர்.

கருமையும் செழுமையும் வாய்ந்த அழகான தலைமுடி இளைஞர்களுக்கு ஒரு கம்பீர தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் இளம் பெண்களுக்கோ கருநிறமான கூந்தல் ஒரு தனிக் கவர்ச்சியை அளிக்கிறது. என்பதில் சந்தேகமே இல்லை எனலாம். எனவே தலைமுடி தொடர்பான பிரச்சனை, பாதுகாப்பு, இயற்கை மருந்துகள் போன்றவற்றிலிருந்து ஆராய்வோம்.

படிக்காத நாட்டுபுற பெண்களிடத்தில் தங்கள் கூந்தலை இயற்கையாக பராமரிப்பது குறித்து அனுபவ அறிவு ஒரளவாவது இருக்கிறது. படித்த பெண்களிடத்தில் அந்த மாதிரி அறிவு கூட தெளிவாகி இல்லை. ஷாம்பூ, செயற்கை ரசரயன அழகு சாதன பொருட்கள் பெருமளவு தீங்கு செய்கின்றன. முடி கொட்டி வீணாவதற்க்கு நரைப்பதற்கு நம்முடைய கவனக் குறைவும், சத்தற்ற உணவும் முக்கிய காரணம்.

தலைமுடி பராமரிப்பு என்பது என்ன ?

அன்றாடம் தலை நனைத்து தாராளமாக நீர் விட்டு குளித்தல் (காக்கை குளியில் குளிக்க கூடாது ) குறைந்த பட்சம் 10 பக்கெட் (வாளி) தண்ணீர் குளிக்கலாம். ஏனெனிறால் நம் முன்னோர்கள் ஆறு, ஏரி,குளம், கிணற்றில் பல மணி நேரம் நீரில் மூழ்கி நீராடினர், முடி பராமரிப்பு முதல் மூளை கோளாறு, புற்றுநோய், தோல் வியாதிகள் உட்பட பல நோய்கள் வராமல் தடுக்க நீண்ட நேர குளிர்ந்த தண்ணீர் தலை முழுகல் அவசியம். தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தில் வசிப்போர், எண்ணெய் தேய்த்து தலை முழுகும் நேரம் தவிர மற்ற நாட்களில் எக்காரணம் கொண்டும் (குளிர் காலத்திலம் கூட )வெந்நீரில் குளிக்க கூடாது (வயதானவர்கள் விதிவிலக்கு). ஏனென்றால் கடுமையான நரம்பு தளர்ச்சியும் கொடிய வியாதிகளும் வெந்நீரில் குளிப்பதால் வெப்ப நாடுகளில் வசிப்பவர்களுக்கு பல நோய்கள் ஏற்படுகிறது.

வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ ஷாம்பூ (இயற்கை முறையில் தயாரித்து (அல்லது) இரசாயனம் கலவாததை) உபயோகிக்கலாம். எக்காலத்திலும் வீட்டில் சிகைக்காய் அரைத்து வைத்து பயன்படுத்த வேண்டும்.

சிகைக்காய் தயாரிக்கும் முறை

சிகைக்காய் = 2 கிலோ
வெந்தயம் = 1/4 கிலோ
பச்சை பயிறு = 1/4 கிலோ
பச்சரிசி = 1/4 கிலோ
செம்பருத்தி பூ = 100 கிராம்
மருதாணி இலை (காய்ந்தது) = ஒரு கைபிடி
வெட்டி வேர் = 100 கிராம்


சேர்த்து நன்கு காய வைத்து அரைத்து பயன்படுத்திடலாம் வெப்பம் தணிந்து தலை குளிச்சியடைந்து கேசம் பொலிவுறும்.

குளித்த பிறகு தேங்காயெண்ணெய் (அல்லது) ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) மட்டும் தடவி தலை சீவுதல். நெருக்கமான பற்கள் இல்லாத சீப்பைக் கொண்டு மென்மையாக தலை சீவுதல், தலைமுடியில் ஆரோக்கியத்தை வளர்க்கிறது. கூடிய சத்துக்களை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுதல்...

சத்துணவு குறிப்புகள்

தலைமுடி செழுமையாகி வளர இரும்பு சத்தும் கொழுப்பு சத்தும். வைட்டமின் சத்தும் மிக அவசியம். முடி செழுமைக்கு வெண்ணெய் , நெய், வேர்கடலை, பருப்பு வகைகள் , கோதுமை போன்றவை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இரும்பு சத்து மிக்க கருவேப்பிலை, முருங்கை கீரை, அரைச்சீதை போன்ற கீரைகள். திராட்சை, பேரீட்சை, மாதுளை, அத்தி பழம் போன்ற பழவகைகளும் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். சிவப்பு முள்ளங்கி, பீட்ருட், போன்றவை ரோம வளர்ச்சிக்கு முக்கியமானவை.

கேச வளர்ச்சிக்கு தக்காளிபழம் உதவுகிறது. விதை நீக்கிய தக்காளிபழம் உதவுகிறது. விதை நீக்கிய தக்காளி சாறு (அல்லது) சூப், ஜாம் போன்றவை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் குளிர் நாட்டிலிருந்து இங்கு வந்த தக்காளி கடும் வெப்ப நிலையை நம் உடலில் உருவாக்கும் . தக்காளி,= கடும் பித்தம் கவனம் தேவை.

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5