நிதி நிலை அறிக்கை ஒரு முழு அலசல்
மணி
நடப்பு நிதி ஆண்டிற்கான 2009-10 நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 05.07.2009 திங்கட்கிழமை அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அதில் 2009-10ம் ஆண்டிற்கான பட்ஜட் மதிப்பீடு தொகை ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்து 848 கோடியாக இருக்கும் என்று, பட்ஜட் உரையில் அறிவிக்கப்பட்டது. இதேபோல் வருவாய் பற்றாக்குறை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.8% ஆக இருக்கும் என்றும் அறிவிக்கப்ட்டு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜட் தாக்கல் செய்யப்பட்டபோது அப்போதைய பட்ஜட் மதிப்பு ரூ.193 கோடி ஆகும் 63 ஆண்டுகளில் பட்ஜட் தொகை இவ்வளவு உயர்ந்து இருக்கிறது.
· வருமான வரிச் சலுகை
வருமான வரி செலுத்துவேருக்கு 10 லட்சத்துக்மேல் விதிக்கப்ட்டு வந்த 10% கூடுதல் வரி ரத்து செய்யப்படகிறது. தற்போது ‘ஆண்’களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாகவும் ‘பெண்’களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாகவும் மூத்த குடிமக்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளத. இந்த அளவு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு பொதுவில் ரூ.10 ஆயிரம் மூத்த குடிமக்களுக்கு ரூ.15 ஆயிரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆதன்படி இனி ஆண்களுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையும் பெண்களுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வரையும் மூத்த குடிமக்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரையும் உள்ள அண்டு வருமானத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை. க்ஷசாத்து வரிக்கான வருமான உச்ச வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. ரூ.40 லட்சம் வரை வணிகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு முன்கூட்டியே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதால் தேர்தலுக்காக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100% வரிக்கழிவு அளிக்கப்படும்.
· வரி விலக்கு
வர்த்தக முத்திரையிடப்பட்ட நகைளுக்கு 2 சதவிகித உற்பத்தி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். அழகு சாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான பொருட்கள் ரெயில் மற்றும் கடல் வழியாகவும் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மூலமும் கொண்டு வரப்படும் பொருட்களுக்கும் சேவை வரி விதிக்கப்படும். ‘பயோ-டீசல்’ அதற்கான அடிப்படை சுங்க வரி 7.5ரூ இருந்து 2.5ரூ ஆக குறைக்கப்படுகிறது. பெட்ரோலில் இருந்து சிறிய லாரிக்கான சுங்க வரி 20.9ரூ லிருந்து 8ரூ ஆக குறையும், கைத்தரி, செயற்கை இழைக்கான சுங்க வரி 4ரூ லிருந்து 8ரூ ஆக அதிகரிக்கப்படும்.
· உயிர்காக்கும் மருந்துகள்
மார்பு புற்றுநோய், மூட்டுவரி, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கான 9 (ஒன்பது) வகை உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் புளு காய்ச்சல் தடுப்பூசிக்கான அடிப்படை வரி 10% லிருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. சுங்க வரியும் 7.5% லிருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. உற்பத்தி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறத.
· ஆடம்பர பொருட்களுக்கான வரி
2000 சி.சி. மற்றும் அதற்கு அதிக திறன் கொண்ட பெரிய ரக கார்களுக்கான உற்பத்தி வரி ரூ.20,000தில் இருந்து ரூ.15,000/-யிரமாக குறைக்கப்படுகிறத. லாரி மற்றும் டிரக்குகளுக்கான உற்பத்தி வரி 20% குறைக்கப்படுகிறது.
காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கிய உபகரணமாக விளக்கும் பெமனென்ட் மேக்னட்ஸ் அதற்கான அடிப்படை சுங்க வரி 7.5% லிருந்து 5% ஆக குறையும்.
· உற்பத்தி வரி
பிஸ்கட், கேக் மற்றும் ரொட்டி வகைகள், சர்பத், சில மருந்து மாத்திர வகைகள் மருத்துவ உபகரணங்கள் மின்சாலத்தில் இயங்கும் நீர் இறைக்கும் பம்புகள் ரூ.250 முதல் ரூ.750க்கு உட்பட்ட காலணிகள், பிரஷர் குக்கர்கள் புளோரசன்ட் விளக்குகள் உடல் ஊனமுற்றோருக்கான கார்கள் போன்றவைகளுக்கு 4ரூ வீதத்திலிருந்து 8ரூஆக உற்பத்தி வரி உயர்த்தப்படுகிறது.
செட் ஆப்பாக்ஸ் 5% வீத சுங்க வரி விதிக்கப்படும், தங்கள்ம-வெள்ளி இறக்குமதி’க்கு விதிக்கப்படும் சுங்க வரி உயர்த்தப்படுகிறது. தங்கத்திற்கான சுங்க வரி 10 கிராமுக்கு ரூ.250 ஆக இருந்தது இனி ரூ.500 ஆக உயரும்.
· கல்வி கடன் சலுகை
அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் கடன்களுக்கும் முழு வட்டித் தொகையும் மானியமாக வழங்கப்படும் அதன்மூலம் 5 லட்சம் மாணவ மாணவியர் பயன் பெறுவர்.
· 6% வட்டியில் கடன்
குறிப்பிட்ட காலத்தில் கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.6% வட்டி விகிதத்தில் கடன் வழங்குவது, இவ்வாண்டு விவசாய கடன் இலக்கை 3 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக அதிகாரத்துடன் தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஒரு நாள் கூலி ரூ.100 ஆக அதிகரிக்கப்படும்.
· விலை குறைப்பும் - விலை ஏற்றமும்
உயிர் காக்கும் மருந்துகள், செல்போன்கள், எல்.சி.டி. தொலைக்காட்சி போன்ற பொருட்களின் விலை குறையும்.
இறக்குமதி செய்யப்படும் தங்கம்-வெள்ளி மற்றும், செட்-டாப்-பாக்ஸ், ஜவுளி பொருட்கள் பிரஷர் குக்கர், பிஸ்கட், கேக் மற்றும் ரொட்டி போன்ற பொருட்களின் விலை உயரும்.
· 9% பொருளாதாரத்தில் வளர்ச்சி
பொருளாதாரத்தில் வளர்ச்சி 9% ஆக எட்டப்பட்டள்ளது. இவ்வாண்டிற்கான மொத்த உள்நாட்டு உள்பத்தி 6.7% ஆக குறைந்திருபூபதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிதி நிலை அறிக்கையில், மொத்த செலவீனம் ரூ.10லட்சம் கோடியை தாண்டி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. நாட்டின் அடிப்படை கட்மைப்பு வசதிளை பெருக்குவதற்காக இந்திய கட்டமைப்பு வசதி நிதி கழகம், வங்கிகளுடன் இணைந்து ரூ.1 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
· ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு
வருகின்ற 2014 ஆண்டிற்குள் நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஆண்டு தோறும் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
· பொதுத்துறை
பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரை முக்கிய பங்கு தாரதாக அரரே நீடிக்கும், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து பொதுத்துறையில் நீடிக்கும் என்றும், ஆனால் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை தொடர்பாக திட்டவட்டமான அறிவிப்பு எதையும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கவில்லை.
· நிதிநிலை விமர்சனங்கள்
--------------------------------------------
- பிரதமர் மன்மோகன் சிங்க உலக பொருளாதார சரிவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதார பாதிப்பை குறைப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. குறுகிய காலத்தில் 8ரூ முதல் 9ரூ வளர்ச்சியை நாம் எட்டியாக வேண்டும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளத என்று பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
- தமிழக முதல் கலைஞர் அவர்கள் விவசாயிகளுக்கு முன்னுரிமையும் அனைத்து பிரிவினரும் பொருளாதார வளர்ச்சி பெற வகை செய்யும் பட்ஜெட் என்று பாராட்டினார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் குப்தா பொருளாதார வீழ்ச்சியை நாமாளிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவிலல்லை என்றும் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளித்தது காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு மட்டுமே இலாபம் என்றார்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, மத்திய பட்ஜெட் நடுத்தர, ஏழை-எளிய மக்களை பாதிக்கும் புதிய வரி எதுமில்லை. பல்வேறு வரிச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளன என்றார்.
- ம.தி.மு.க பொரு செயலாளர் வை.கோ. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கையே ஏறிய விலைகளை குறைக்கவோ வழிவகை காணவில்லை. நதிநீர் இணைப்பு, சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது, ஏமாற்றம் தருகிறது என்றார்.
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மத்திய அரசின் வரவு-செலவுகளை அறிவித்தார்களே தவிர மக்களின் பொதுவான வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றார், ஒரே சாதனை ரூ.193 கோடியில் ஆரம்பித்த இந்திய அரசின் செலவு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியதுதான் என்றார்.
- சென்னையில் உள்ள கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் சுவிட்சர்லாந்து வங்கியில் பதுக்கு வைக்கப்பட்டுள்ள ரூ.75 லட்சம் கோடி ரூபாயை அரசு கையப்படுத்தினால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தலா 1 லட்சம் வரை வழங்கலாம் என்றும் அவ்வாறு கையப்படுத்தினால் பட்ஜெட் இனி தேவையே இல்லை என்றார்.
- அதே கல்லூரியில் பணியாற்றும் ஆங்கில பேராசிரியர், மிகவும் மோசமான பட்ஜெட் என்றும் செல்வந்தர்களை செழிக்க வைக்கும் பட்ஜெட் என்றும் கூறினார்.
- வங்கி மேலாளர் கூறுகையில் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டது என்றார்.