கோடையும் உடல் நலமும்

ஜி. ஜெ. பார்த்தசாரதி

"ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ந்த தண்ணீரில் தலை முழுக வேண்டும்."
தமிழ்நாடு பொதுவாக கடும் வெப்ப பூமி இங்கு வாழும் மக்களுக்கு வெப்பம் (பித்தம்) சார்ந்த வியாதிகள்தான் அதிகம் வரும் ஏப்ரல், மே, ஜுன் போன்ற மாதங்களில் வெப்பகால நோய்கள் ஏற்படும். அம்மை, அக்கி, மஞ்சள்-காமாலை போன்றவை குறிப்பிட தகுந்தவை. இந்த வெப்பம் வியாதிகளுக்கு நோய் வரும்முன்பே சில வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

(i) ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ந்த தண்ணீரில் தலை முழுக வேண்டும். குளியல் நேரம் 1/4 மணிமுதல் 1/2 மணி நேரம் (அல்லது) 10 பெரிய பக்கெட் (வாளி)
(ii) காலை உணவாக பாசி பருப்பு 10 சீரகம் சேர்ந்த அரிசி கஞ்சி
(iii) மதியம் 1/2 லிட்டர் மோர் அருந்தலாம்.
(iv) தினமும் தர்பூசணி சாறு, கிர்ணி பழம், முலாம் பழம், வெள்ளிரிக்காய், பன நுங்கு போன்றவை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
(எ) நல்ல களிமண் கிடைத்தால் உடல் முழுவதும் இளநீர் உடன் கலந்து பூசி குளிக்க வேண்டும்.


• முள்ளங்கி கிழங்கு சாறு எடுத்து அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் நீர்சுருக்கு குணமாகும்.
• கீழா நெல்லி சமூலம் எலுமிச்சை அளவு அரைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில், மோர் உடன் சாப்பிட்டு வந்தால் வெப்ப வியாதிகள் வராமல் தற்காத்து கொள்ளலாம்.
• இலவம் பிஞ்சு 10 சீரகம் இதனை சம அளவு அரைத்து பால் உடன் தினம் இரண்டு வேளை சாப்பிட வெப்ப வியாதிகள் நீங்கும்.
• தினமும் சீரகத்தை தண்ணீர்; சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட வெப்ப வியாதிகள் நீங்கும்.
• மாசிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி தூள் செய்து காலை/மாலை நெய் சேர்த்து சாப்பிட வெப்ப வியாதிகள் (குறிப்பாக குடல் புண்) குணமாகும்.
• நன்னாரி 10 வெட்டி வேர் வாங்கி (நாட்டு மருந்து கடைகளில்) சம அளவு குடி தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெப்ப வியாதிகள் அணுகாது. இருந்தால் விரைவில் குணமாகும்.
• கசகசா நன்கு அரைத்து உடலில் தேய்த்து பூசி குளித்து வந்தால் வெப்ப வியாதிகள் வராது.
• பொதுவாக பெரு நோய்க்கு ஒரு சில மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் உண்டு. ஆனால் உலகின் முதன்மை மருத்துவமான சித்த மருத்துவம் (ஆயுர்வேதம் அல்ல) நாளுக்கு மேலான உணவு மருத்துவமாதிலே குறிப்புகளை நமக்கு தருகிறது எனவே இதனை கூடுமான வரை பயன்படுத்தி) கோடைக்கால வெப்ப வியாதிகளை விரட்டுவோம்.


இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5