கணிப்பொறியும் கண்களும்
ஜி. ஜெ. பார்த்தசாரதி
மனித உடலில் மிக முக்கியமான பகுதி தலை ஆகும். எண் ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சொல் வழக்கு அதிலும் குறிப்பாக கண் முக்கியமானது.
பார்வையின் உறுப்பு, விழி அதன் சார்பு அமைப்புகளான தசைகள், இரத்த குழாய்கள் நரம்புகள், கொழுப்புத் திசுக்கள் முதலியனவும் நேத்திர குழியை நிறைத்து விடுகின்றன. முன்னால் விழிக்கு பாதுகாப்பாக இமைகள் அமைந்திருக்கின்றன அதிக வெளிச்சம் பாதிப்பு வராமல் இமை தடுக்கிறது இமை மயிர் கண்களில் தூசி விழாமல் பாதுகாக்கிறது. இகைள் தோல் மடிப்புகளால் ஆனவை அவற்றின் உட்புறங்களிலுள்ள கண்ணிமை படலம் விழியின் முன் பாகத்திரும் அமைந்திருக்கிறது வட்ட வடிவத்தில் அமைந்துள்ள தசை சுருங்குவதின் மூலம் இமைகள் மூடுகின்றன விழியின் முன்புறத்தை தூய்மையாகவும் ஈரப்பசையுள்ளதாகவும் வைத்திருக்கும் உவர் நீரையில் கண்ணீர் சுரப்பி உற்பத்தி செய்கிறது இந்த சுரப்பியின் நாளங்கள் வழியே கண்ணீர் விழியின் மேற்பாகத்தை அடைகிறது. இந்த சுரப்பி இடைவிடாமல் நீர் சுரந்து கொண்டிருக்கிறது விழியில் படக்ககூடிய தூசிகளை அது அகற்றுகிறது.
கண்விழியைத் தசைகள் பாதுகாக்கின்றன மேலும் கொழுப்பு திசுக்களும் இணைப்புத் திசுக்களும் கூட விழி கோளத்தைப் பாதுகாக்கின்றன. கண்களை சுற்றி பித்த நீர் சேராமல் காக்க வேண்டும். நம் முன்னோர்கள் எண்ணெய் குளியல் முiயில் கண் பார்வை குறைபாடுகளை சரி செய்தன்h.
கண் பார்வை குறைவு காரணங்கள்:
· திரைப்படம் தொலைக்காட்சிகளை அதிகம் காண்பது
· கணிப்பொறி வேலை (அதிக நேரம் கம்ப்யூட்டரில் செலவிடுவது).
· தாம்பத்திய உளவில் அளவு கடந்து ஈடுபடுபவர்களுக்கு சீக்கிரம் கண் குருடாகும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.
· நம் உடலில் மலச்சிக்கலால் உண்டாகும் கெடுதல் மிக அதிமாகில் கண்ணைப் பற்றும்போது கண் படலம் உண்டாகி வளர்ந்து கண் பார்வை சிறிது சிறிதாக குறைகிறது (மலச்சிக்கலால் கண்டபடலம் ஏற்படுகிறது என்பதை ஆங்கில மருத்துவமுறை ஏற்கவில்லை)
· வைட்டமின் ‘ஏ’ சத்து பற்றாக்குறை நம் உணவில் கவன குறைவாகயிருப்பது.
· பரம்பரை மாலைக்கண், கண் கோளாறுகள்.
கண் குறைகளை போக்க உதவும் உணவு குறிப்புகளும் சித்த மருந்துகளும்....
அடுத்த வாரம் ...