கணிப்பொறியும் கண்களும் : 2

ஜி. ஜெ. பார்த்தசாரதி



உணவு குறிப்புகளும் சித்த மருந்துகளும் - இயற்கை சிகிச்சை முறையில்:

1. வைட்டமின் ‘ஏ’ (உணவு குறிப்புகள்)

வைட்டமின் என்ன செய்கிறது தெரியுமா கண்ணால் பார்பபது என்னும் இயக்கத்திற்கு இந்த வைட்டமின் மிகவும் உதவுகிறது. பார்வை என்பது ஓரளவு கண் லென்ஸ் சம்பந்தப்பட்ட பௌதிக நிகழ்ச்சி ஓரளவு வைட்டமின் கலந்த இரசாயன நிகழ்ச்சி எனலாம். வைட்டமின் குறைவால் பார்வை குறைகிறது. குறைந்த வெளிச்சத்தில் இந்த குறைபாடு மிகுந்திருக்கும். சிறு குழந்தைகள் இளம் வயதிலேயே கண் அணிகள் அனிவது இந்த வைட்டமின் குறைபாடுதான். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் சரியான சத்துள்ள உணவின்றி பார்வைதிறன் இழக்கின்றனர்.

வைட்டமின் நிறைந்த உணவுக்ள:

1.நெய், 2. பால், 3. தயிர், 4. முட்டையின் மஞ்சள் கரு, 5. ஆட்டு ஈரல், இவை அசைவ உணவுகள்

2.கீரைகள், 2. முள்ளங்கி வகைகள், 3. கேரட், 4. பப்பாளி, 5.கருவேப்பிலை, 6.புதினா, 7 மஞ்சள் பூசனி, 8.தக்காளி, 9.மாம்பழம் போன்ற பழ வகைகளில் இந்த வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளது.

2. சித்த மருத்துவ சிகிச்சைகள்:

சேமம் புகுந்தலும் ஒரு சாமத் துறநுகாதார் கால் நடையன், இல்லாது கழக வழி நடப்பர் மேகத்தால் கண்ணெரிச்சல் மேவுமே வையகத்தில் ஞானத்தால் நீக்கலாம் நன்று...

-சித்தா பாடல்

பொருள்:

கண் எரிச்சல் என்பது அதிகமாக கண் விழிப்பதாலும் தரையில் செருப்பு இல்லாது நடப்பதாலும் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது மூலம் சூடாகி மூளை சூடாகி உந்தி கமலத்தில் பாய்ந்து - நோயாகி கண்ணெரிச்சல் தோன்றும்.

நம் கண்களை காக்க , பின்வரும் சித்தா முறைகளை கையாளலாம் ,

1.ஆவாரங்கொழுது + பச்சைப்பயிறு சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளிர்ந்த தண்ணீரில் நீராட வேண்டும்

2.முற்றிய தேங்காய் + வெந்தயம் வைத்து அரைத்து தலையில் பூசி அரை மணிநேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

3.வெள்ளை மிளகை அரைத்து பாலில் காய்ச்சி சூடு ஆறிய பின்பு தலையில் தேய்த்து குறிக்க கண் எரிச்சல் குணமாகும்.

4.குமரி எனப்படும் சோற்று கற்றாழை மடலை எடுத்து வெள்ளை துணியில் கண்மேல் வைத்து 10 நிமிடம் குளிச்சியூட்ட கண் எரிச்சல் குணமாகும்.

5.கண் கட்டிக்கு சங்கு உரசிப்போட்டால் குணமாகும் மிளகை வெந்நீரில் அரைத்து பூச குணமாகும் சந்தனத்தை அரைத்து பூச குணமாகும். மாதுளைத்துளிரைத் தண்ணீரில் அவித்து அந்த நீரால் காலை மாலை கண்களை கழுவ குணமாகும்.

6.கண் பூ விற்கு மருந்து: தேன் கொடுத்த இலை + நந்தியாவட்டைப் பூவையும் சம அளவு எடுத்து கசக்கிப் பிழிந்து அந்தி ரசத்தை (சாற்றினை) கண்ணீரில் விட்டால் கண் பூ கரைந் விடும். 4 முதல் 7 வேளை இவ்வாறு செய்ய வேண்டும். முசு முசுங்கையிலையும் + சீரகமும் எரி எடை எடுத்து இடித்துத் துணியில் முடிந்து முலைப்பாலில் தேய்த்துக் கண்ணில் பிழிந்து வந்தால் கண் பூ மாறி விடும்.

7.கண் அரிப்பு நீங்க மருந்து புளியம் தழையை அவித்து அந்த நீரால் காலை மாலை கண் கழுவினால் அரிப்பு நீங்கும்.

8.கண் வலிக்கு அனைத்து வகை கண் வலிகளுக்கு (கணிப்பொறி பாதித்தல் உட்பட) மாதுளந்துளிர் + கொவ்வையிலை இரண்டையும் அரைத்து அதனுடன் பச்சை வெண்ணெயைச் சேர்த்து கண்ணைச் சுற்றிப் பூசி வந்தால் கண் வலி நீங்கும்.

மாலை கண்ணை பற்றி அடுத்த வாரம் பார்போம் ...

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5