கணிப்பொறியும் கண்களும் - இயற்கை சிகிச்சை முறைகள்.

ஜி. ஜெ. பார்த்தசாரதி



மாலைக்கண் குணமாக

சுத்தமான புளிச்ச கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அத்துடன் இரண்டு மிளகாய்ச் சேர்த்து வேகவைத்து பின் கடைந்து சாதத்துடன் கலந்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு நாளைக்கு காலை - மாலை இரு வேளை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட நோய் குணமாகும். மூன்று நாட்களும் உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும். இதுபோல் மாதம் மூன்று நாள் மூன்று மருந்து சாப்பிட மாலைக்கண் முழுவதும் குணமாகிவிடும்.

இயற்கை சிகிச்சை முறைகள்: கண் குளியல்

காலை - மாலை சூரிய உதயம் மறைவு இரண்டினையும் தொடர்ந்து பார்த்து வந்து கண்களை சுத்தமாக குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். கண்களையும் அதைச்சுற்றியுள்ள திசுக்களையும் செம்மை படுத்துவது கண் குளியல் ஆகும். இது இதமான தெம்புடன் கூடிய ஓய்வை அளிக்கிறத குளிர்ந்த நீரை இதமாகில் கண்களில் தெளிக்கலாம். அல்லது கண் அளவிற்கான கண்ணாடி பாத்திரத்தில் நீர் நிரப்பி கண்ணை அதில் மூழ்கி வைக்க வேண்டும். நீரில் கண்களை கீழ்நோக்கி வைத்து நீறுக்குள் இமைக்க வேண்டும். ஒவ்வொரு கண்ணையும் அரை நிமிடம் இவ்வாற கழுவ வேண்டும் அதி நேரம் கண்ணை நீரில் வைக்க கூடாது. அவ்வாறு செய்தால் கண் நீரை இழுத்துக் கொள்ளும்.



உள்ளங்கைப் பயிற்சி

கண் களைப்புற்றிருக்கும் சமயம் சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்வதால் கண் பார்வை தெளிவடைவதையும் கண்ணில் ஒரு புத்துணர்ச்சி உணருவதையும் நாம் அறியலாம். கண் மூடினாலும் இமை வழியாக சிறிது ஒளி கண்களை அடைகிறது. இந்த சிறு ஒளி கண்ணில் வருவதை தடுத்தால் கண்கள் அதிக புத்துணர்ச்சி பெறும். மூடிய கண்களை உள்ளங்கையினால் கண்களை அழுத்தாமல் மூடிக்கொள்ள வேண்டும். இதுவே உள்ளங்கை பயிற்சி ஆகும்.

மூடிய கண்களை உள்ளங்கயைனிhல் மூடிக் கொண்டதும் கற்பனை உலகிற்கு செல்ல வேண்டும். ஒரு ரோஜா வான் மேகம், நீர்வீழ்ச்சி, போன்ற மதுக்கு பிடித்த கற்பனை சிறகை விரித்தால் கண், மனம் சுகமாகும். இதனை 10 முதல் 15 நிமிடங்கள் செய்யலாம். இது ஒரு இயற்கை சிகிச்சை ஆகும்.

நமக்கு மிக எளிதில் கிடைக்க கூடிய கடை மருந்துகள்.

1. நீலாஞ்சனமை (இதனை வாரம் இருமுறை கண்ணில் தீட்டி கொள்ளலாம்)

2. நேத்திர பூண்டு தைலம் (இதனை கண்களுக்கு தொடர்ந்து பயன் படுத்தலாம்)



இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5