"கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும்."
மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்காக என்கின்றார்கள். நீர் ஒரு வணிகப்பொருளா என்ற கேள்வி இன்று உலகம் முழுவதும் எழுப்பப்பட்டு வருகிறது. நீர் உலகத் தேவை என்ற வரையறையும் திரும்ப திரும்ப வலியுறுத்தப்படுகிறது.
நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது, 2010'க்கு பின் பஞ்ச சாவுகள் போல் தாக சாவுகளும் ஏற்படும் என்று ஆரூடம் சொல்கிறார்கள். இந்நிலையில் பயன்படுத்தப்படும் நிரை மறு சுழற்ச்சி செய்து பயன்படுத்துவதும், கழிவு நீரையே குடிநீராகப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தமும் உருவாகியிருக்கிறது.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூருக்கு தண்ணீர் விநியோகம் பெரும் செலவில் மலேசியாவிலிருந்து நடைபெறுகிறது. கழிவு நீரை உபயோகப்படுத்த சிங்கப்பூர் மக்களிடம் பொது கருத்துக் கணிப்பும் நடைபெற்றிருக்கிறது. சிங்கப்பூர் மக்களும் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள். சிங்கப்பூரின் 2% குடிநீர் தேவையை கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்படும் நீர் நிறைவு செய்கிறது. இது இவ்வாண்டில் 5% ஆக உயர உள்ளது.
கழிவுநீரை தொட்ட உபயோகங்களுக்குப் பயன்படுத்துவதில் பலமானத் தடைகள் இருந்தன. ஆனால் வேறு வழியில்லாமல் பயன்படுத்த வேண்டியதானது. பெரிய தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பயன்படுத்துவது. உணவு, இடைவேளை நேரங்களில் கழுவப்பயன்படுத்தும் நீரை மறு சுத்திகரிப்பு செய்து ஆரம்ப நிலையில் கழிப்பாகங்களுக்கும் சிறு உபயோகங்களுக்கும் என்றாகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் பெரும் தொழில் பேட்டைகள் இவ்வகையான கழிவு நீர் சுத்திகரிப்பு உபயோகம் வெகு சாரணமாக நடைபெற்று வருகிறது.
இதன் அடுத்த படியாக இன்னும் தண்ணீர் தேவை அதிகமுள்ள இடங்களில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராகப் பயன்படுத்தப்பட வேண்டியது. சிங்கப்பூர் இதற்கு சரியானச் சான்று. லாஸ் ஏஞ்சல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரே நகரின் பொது உபயோகத்திற்கு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்திற்கு இஸ்ரேல் போன்ற நாடுகளில் அதிகளவில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீர் தனியார் மயமாக்கல் என்பது இவ்வகை பயன்பாட்டிற்கான நிர்பந்தத்தை அதிகரித்து வருகிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் சிரமப்படுகின்றன. 10,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியாக ஆண்டு தோறும் திருப்பூருக்கு கிடைக்கிறது. சாயநீர் சரியாக சுத்திகரிக்கப்பட்டு மறு சுழற்சி, சுத்தம் செய்து உபயோகப்படுத்தப்படாமல் நொய்யலில் சேர்ந்து சுற்றுச்சூழல் சீர்கேட்டை அதிகரித்து வருகிறது.
மூன்றாம் உலக நாடுகளின் ‘உடையாக இருக்கும் திருப்பூர்’ தண்ணீர் தனியார் மயமாக்கல் திட்டத்தில் பவானியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து திருப்பூர் பின்னலாடைத் தொழிலைக் காப்பாற்றி வருகிறது. உலகன் பல பாகங்களில் தண்ணீர் தனியார் மயமாக்கல் தோல்வியடைந்திருக்கிறது. எதிர்பார்த்த அளவு தண்ணீரை மக்கள் பயன்படுத்தாதலால் அந்த தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க முடியாததால், நீர் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியும் பெருமளவு லாபம் கிட்டதபோது அவ்வகைத் திட்டங்கள் தோல்வியடைந்து முடக்கப்படுகின்றன. இது திருப்பூருக்கும் நேரலாம். ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் ஜீரோ டிஸ்சார்ஜ் முறைகளால் சாய நீரை மறு சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவது தீர்வாக அமையும்.
பாட்டில்களில் பாலைவிட தண்ணீரின் விலை அதிகம். தாக சாவுகளிலிருந்து மீள கழிவு நீரை சுத்திகரிக்கப்பட்டு உபயோகப்படுத்தும் சிங்கப்பூரைப் போல இந்தியாவிலும் பின்னால் தவிர்க்க முடியாததாகலாம். மினரல் வாட்டர் என்ற பெயரில் வாங்கும் தண்ணீர் - கழிவு நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதா, சிறுவானி தண்ணீர் சுவையான தண்ணீரா என்பது தாகத்திற்கு முன் வெகு சாதரணமாக கேள்வியாக இருக்கும்.