எப்படி விழ்ந்தோம் ?

ஏங்கல்ஸ் ராஜா


"நிலம் விளைச்சலுக்கு தகுதியற்று போனது (மலடானது) "
இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மக்கள் தொகை பெருகி வருவதைப் போல உணவு உற்பத்தி பெருகவில்லை. அதனால், 1940களில் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போல மீண்டும் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் மடியும் நிலை ஏற்படும் என்று 1960களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் வெளியான பத்திரிக்கைகள் இந்த செய்தியை திட்டமிட்டு வெவ்வேறு வடிவங்களில் வெளியிட்டு வந்தன. இதை நம்பிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை நாடின. தாராளமயமான அமெரிக்கா உடனே உதவியது! எப்படி தெரியுமா?

அமெரிக்காவிலிருந்து விதை, ராசாயன உப்பு, உயிர்க்கொல்லி நஞ்சுகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறக்குமதி செய்தார்கள். லட்சம் ஆண்டுகளாக உழவு செய்து வந்த நாடுகளுக்கு வெறும் 150 ஆண்டு அனுபவம் உடைய அமெரிக்கா உதவியது தான் விந்தை. பல லட்சம் ஆண்டுகளாக, விளைநிலத்தையும் உயர்ச்சூழலையும் சிதைக்காமல் உழவு செய்து வந்த மூன்றாம் உலக ஏழை நாடுகள் மீது, ரசாயன உப்புகளும், உயிர்க்கொல்லி நஞ்சுகளும் திணிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் இந்திய நாட்டு மக்களை பசியின்றி வாழச் செய்வதற்காக அல்ல. தங்கள் நாட்டு கம்பெனிகள் தயாரிக்கும் ரசாயனங்களை, தொழில்நுட்பங்களை விற்கவேண்டும் என்பதற்காகத்தான்.

திணிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், ரசாயனங்கள் நம்மிடம் இருந்த பயிர்களுக்கு ஏற்றதாக இல்லை. நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளத்தை இழக்க ஆரம்பித்தன. விதையையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தயாரித்த கம்பெனிகள், அதனை விற்ற நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் அடைந்தனர். இதனால் உழவர்கள் அடைந்த இன்னல்களை அளக்க முடியாதது,

விதை பறிபோனது
அறிவு மழுங்கிபோனது
நிலம் விளைச்சலுக்கு தகுதியற்று போனது (மலடானது)
பூச்சிகள், புழுக்கள் மற்றும் பறவையினங்கள் மடிந்தன.
உயிர்ச்சூழல் பறிபோனது.
நிலத்தடி நீர் சுவையில்லை. விஷமானது, பாதாளத்திற்கு போனது.
உண்ணும் உணவு நஞ்சானது.
மண்ணுக்கேற்ற உள்நாட்டு கால்நடையினங்கள் அழிந்து போனது.
உயிரினங்கள் அனைத்தும் நோய் வாய் பட்டது.
நிலத்தை விட்டு மக்கள் வெளியேறினார்கள்
வேலைத் தேடி நகரத்தை நோக்கி கூலிகளானார்கள்.
கடன் வாங்கி திரும்பி செலுத்த முடியாமல் உயிரையே விடுகிறார்கள்.
விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையையே இழந்துள்ளார்கள்.


நம்முடைய பாரம்பரிய அறிவும், தொழில்நுட்பமும் வளமையும் நம்மை விட்டு தூர விலகி போனது. இதையெல்லாம் செய்ய அவர்கள் முதலில் செய்தது வைக்கோலின் உயரத்தை குறைத்து மாட்டுக்கான தீவன தட்டுபாடு ஏற்படச் செய்தது தான். மாடு வைத்திருக்க முடியாத உழவர்கள் டிராக்டர் பக்கம் போனார்கள், டிராக்டர் சாணமும், கன்று குட்டியும் போடாததால் செலவும், வருவாய் இழப்பும் ஏற்பட்டது. இது ஒவ்வொன்றிலும் தொடர்ந்து உழவின் மகத்துவத்தையே இல்லாமல் செய்துவிட்டார்கள்.

1950களின் கணக்கெடுப்பின் படி 23 சதவிகிதமாக இருந்த காடுகள் இன்று 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் பருவமழை மறைந்து புயல் மழை மட்டுமே பெய்கிறது. அதனால் வறட்சியும், வெள்ளமும் பெருகி மக்களைச் சீரழிக்கிறது. நீராதாரங்கள் பல்லாண்டுகளாகப் பராமரிக்கப்படவில்லை. ஆதலால் வெள்ள நீரைச் சேமிக்க முடியவில்லை. ஏரிகளை அழித்தே கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன. அதனால் குடிநீர்ப் பற்றாக்குறை மக்களை வாட்டுகிறது. நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. ஆற்றங்கரை ஓரங்களில் தொழிற்சாலை கட்டப்படுகின்றன. அந்த ஆலைகளின் சாக்கடைக் கழிவுகள் ஆற்று நீரில் கலந்து விடப்படுகின்றன. இதனால் நாடு முழுவதும் விளைநிலங்கள் பாழாகின்றன.

ஆறுகள் மாசுபடுவதை எதிர்த்து நிதிமன்றங்கள் அதிரடித் தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனாலும், ஆற்றங்கரை ஓரங்களில் ஆலைகள் கட்டப்படுவதும் சாக்கடைந நீர் ஆற்றில் கலப்பதும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆற்று நீரை கால்நடைகள், மனிதர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரத்ததுப்பாளையத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நீர்பாசனத்துக்காக கட்டப்பட்ட அணை ஒரத்துப்பளையம் அணை. கட்டப்பட்ட நாள் முதல் கட்டிய நோக்கம் நிறைவேறவில்லை.

நீதிமன்ற உத்தரவுபடி திருப்பூர் முதலாளிகள் முதல் தவனையாக இழப்பீடு கொடுத்துள்ளார்கள். 13 ஆண்டுகளாகத் தேங்கியிருந்த ரசாயக் கழிவுகள் காவிரி வெள்ளத்தில் கலந்து விடப்பட்டது. நஞ்சு, சென்னை செல்ல வேண்டிய தண்ணீர் தரும் வீராணம் ஏரி வரை பயணித்துள்ளதை விஞ்ஞானிகள் சோதித்து அறிந்துள்ளார்கள். தண்ணீர் வற்றும்போது, ஒரத்துப்பாளையம் அணையில் வாழ்ந்த 6 லட்டம் கிலோ மீன்கள் செத்துப் போயின.

தொடர்ந்து பேசுவோம்....

இந்த பக்கத்தை பற்றிய உங்களது கருத்துக்களை கிழே பதியவும் :

உங்கள் பெயர்
 
மின்னஞ்சல் முகவரி
 
கருத்துரையுங்கள்
 
மதிப்பீடு செய்க
  
  • Currently 3/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5