‘பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துகள்’ என்னும் தலைப்புள்ள கட்டுரை, பொருள்முதல் வாதத்தை (உலகாயதக் கொள்கையை) ஆராய்கிறது. வடநாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றிச் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளனர். ஆனால் தென்னாட்டு உலகாயதக் கொள்கையை இதுவரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை. திரு நா.வானமாமலை அவர்கள், தமிழ் நாட்டு உலகாயதக் கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்கிறார். பொதுவாக இந்நூல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுமென்பதில் ஐயமில்லை. சிந்தனையை எழுப்பி ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிற இந்நூல் கட்டுரைகள், அறிவுக்கு விருந்தாக உள்ளன. இது போன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச்சில. பயனுள்ள நல்ல நூல் என்று இதனை வாசகர்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.
-ஆ. பத்மாவதி, தொல்லியல் ஆய்வாளர்
Reviews
There are no reviews yet.