Back Cover
Look Inside

அறியப்படாத தமிழ்மொழி

250.00

அறியப்படாத தமிழ். மறுக்கப்பட்ட தமிழ். மறைக்கப்பட்ட தமிழ். இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்.  அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்/பண்பாட்டில், பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல், பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள். அவற்றை விலக்கி ‘பண்பாட்டு நீதி’யை வென்றெடுக்க, ஒரு கருவியே இந்நூல்!

தொல்காப்பியர் முதல் தொ.பரமசிவன் வரை…ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை…

அறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, உங்கள் வீடுகளுக்கு எடுத்து வருவதே, இந் நூலின் ‘நோக்கம்’

கால வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர் வாராமலேயே மண் அண்டிப் போய், குளம்  குட்டை ஆகிவிடும் அல்லவா? தமிழ்க் குளத்தை, உங்களோடு சேர்ந்து, தூர் வாரும் புத்தகமே இது!

பக்கங்கள்

280

முதற் பதிப்பு

ஏப்ரல் 2018

ISBN

978-81-934765-6-7

Author

கண்ணபிரான் ரவிசங்கர்

Publisher

தடாகம் பதிப்பகம்

1 review for அறியப்படாத தமிழ்மொழி

  1. pans14 (verified owner)

    நான் எழுதும் முதல் book review

    இந்நூலில், தமிழ்மேல் படிந்த அழுக்குகளை நமக்கு தெளிவாக சுட்டிக்காட்டி அதை அகற்றியும், அகற்றும் முறையையும் நமக்கு கற்றுத்தந்துள்ளார் திரு. கரச.

    “இயற்கையை விட செயற்கைக்கு கவர்ச்சிக்கு உண்டு” இதனாலேயே சங்ககாலம் தொற்று இன்றுவரை நாம் செயற்கை மேல் கொண்ட மோகத்தை சுட்டிக்காட்டி அதை சரி செய்யும் முறையையும் நமக்கு தெரிவிக்கிறார்.

    1000 பக்கங்களுக்கும் மேல் எழுதவேண்டியதை 250+ பக்கங்களில் கொண்டுவந்து என்போல் எளியவருக்கும் புரியும் வகையில் விவரித்துள்ளார்.

    இந்நூலை கதை அல்லது புதினம்போல் படிக்காமல், வாரம் ஒரு படலமாக படித்து அதை நண்பர்களிடம் விவாதிக்கப்பட வேண்டிய நூல்.

    “அறியப்படாத தமிழ்மொழி”ஐ படித்து முடிக்கும்போது இறுமாப்புடன் கொண்ட ஒரு மனநிறைவு கொண்டேன் . எழுத்தாளருக்கு நன்றி

    இயற்கையின் வழித்தோன்றலான தமிழ் வாழ்க!

Add a review

Editorial Review

[embed]https://www.youtube.com/watch?v=k6X_H1VG1QI&t=2s[/embed]