அட்டை வகை | காகித அட்டை |
---|---|
பக்கங்கள் | 69 |
வெளியான ஆண்டு | ஜனவரி – 2019 |
தொகுப்பாசிரியர் | புலவர் வே.பிரபாகரன் |
Author |
புலவர் வே.பிரபாகரன் |
Publisher |
தடாகம் பதிப்பகம் |
ஜீவிய சரித்திர சுருக்கம்
அநேக ஆயிரம் வருஷங்களில் மிக சொற்பமான ஐம்பது வருஷ காலத்தில் தற்போது ஆதிதிராவிடர்களென்றழைக்கப்படும் சமூகத்தவர்களடைந்த அபி விருத்தியை என் ஜீவிய சரித்திரத்தில் கண்டிருக்கிறேன். ஆதி திராவிட சமூக சரித்திரத்தில் இந்தச் சரித்திரமும் சேர்க்கப்படுமென்பது என் நோக்கம்.
இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும், இச்சமூகத்தவர் முன்னேற்றத்தை நாடி செய்து வந்திருப்பது தன்னயத்தேட்டம் என்றும், இச்சமூகத்தவர்கள் தங்கள் இடைவிடா முயற்சியால் விருத்திபெற்று வருகிறார்கள் என்றும் இச்சரித்திரத்தால் விளங்கும்.