தமிழா? சம்ஸ்கிருதமா?

*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவியதே அறிவியலின் வெற்றி!

*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவலே தமிழ் வெற்றி ஆகட்டும்!

அந்த நோக்கில் வெளிவரும் கேள்விகளின் புத்தகமே இது! கேள்வி கேட்டோர், கேட்கின்றோர், கேட்போர் – யாவருக்கும் நனி நன்றி. கேள்வியால் வேள்வி செய்வோம் வாருங்கள்! – இது தமிழ் வேள்வி! தமிழ்க் கேள்வி!

இந்நூல் பிப்ரவரி 1ம் தேதி உங்கள் கைகளில் தவழும்.

180.00

திரு. கரு. பழனியப்பன் (தமிழ்நாடு):

ஒருவர், ஒரே ஒரு கேள்வி கேட்கின்றார்; அந்த ஒரு வரிக் கேள்விக்கு, கிட்டத்தட்ட 12 பக்கம் சிலப்பதிகாரச் சிறப்புகளை எல்லாம் சொல்லிச்சொல்லி ஆத்துப் போகிறார் பேரா. கண்ணபிரான் இரவிசங்கர்.  து போல் பல கேள்விகளைக் கண்ணபிரானை நோக்கி எல்லோரும் எழுப்ப வேண்டும். அதற்கு அவர் பதில் சொல்வதாக, இன்னும் பல புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். ஒரு நூலைப் படித்தால், அது இன்னொரு நூலைப் படிக்க, நூல் பிடித்தாற் போல நம்மை இழுத்துச் செல்ல வேண்டும்! அதுவே சிறந்த நூல்! அப்படி, முனைவர் கண்ணபிரானின் ‘தமிழா? ம்ஸ்கிருமா?’ என்கிற இந்த நூல், மீண்டும் சிலப்பதிகாரத்தைப் படிக்க என்னை இழுத்துச் செல்கிறதுஉங்களையும், ஒரு நூறு புத்தகங்கள் வாசிக்க, இந்த நூல் தூண்டும்!

 

Prof. Dr. Ulrike Niklas (Germany):

“Tamil or Sanskrit?” – which of these two languages is older, purer, worthier, more original, … ? – this question has been put many times already. Often, the answers have been given from an ideological rather than scientific point of view with the aim to prove the one or the other of these languages to be more authoritative. The author of the present book, Dr. Kannabiran Ravishankar (KRS), tries to mediate and to explain from an as scientific as possible point of view – although, naturally, he makes it very clear that Tamil is his mother tongue, but that he has nevertheless also learnt Sanskrit and widely quotes from Sanskrit texts.

 

பேரா. வீ. அரசு (தமிழ்நாடு):

சம்ஸ்கிருதம் தமிழோடு பகை முரண் மொழியாகவே இருந்துள்ளது.  பிராகிருதம் தமிழோடு நட்பு முரண் மொழியாகவே செயல்பட்டிருக்கிறது. இந்நூலில் அத்தன்மைகள் குறித்து விரிவான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வகையான நுண்அலகுகள் சார்ந்த அரசியல் புரிதல் அவசியம். வினா-விடை முறையில் அமைந்திருக்கும் இந்நூல், இன்றைய தேவையைச் சரியாக நிறைவேற்றுகிறது. இதனை  உருவாக்கியுள்ள பேரா. கண்ணபிரான் ரவிசங்கரைப் பாராட்டும் கடமை நமக்குண்டு.

 

திரு. செல்வ கணபதி (நியூசிலாந்து):

பழமையான மொழி தமிழா? சமஸ்கிருதமா? என்ற சூடான வினா பலருக்கும் இருக்கும் ஒன்றே! பேரா. முனைவர். கரச அவர்களின் தமிழாராய்ச்சியும் வடமொழியாராய்ச்சியும் குறித்துப் பலரும் அறிந்ததே. சான்றுகளோடும் தரவுகளோடும் ஆராய்ச்சித் தரத்திலே தரப்பட்ட நல்ல விடைகள் யாவும் தொகுக்கப்பட்ட செவ்வியாய் வருவது கண்டு, Quora தமிழ் சார்பாக அகமகிழ்கிறோம்

பக்கங்கள்

180

முதற் பதிப்பு

January 2021

ISBN

978-93-88627-19-1

Author

கண்ணபிரான் ரவிசங்கர்

Publisher

தடாகம் பதிப்பகம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழா? சம்ஸ்கிருதமா?”