Books

தமிழா? சம்ஸ்கிருதமா?

*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவியதே அறிவியலின் வெற்றி!

*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவலே தமிழ் வெற்றி ஆகட்டும்!

அந்த நோக்கில் வெளிவரும் கேள்விகளின் புத்தகமே இது! கேள்வி கேட்டோர், கேட்கின்றோர், கேட்போர் – யாவருக்கும் நனி நன்றி. கேள்வியால் வேள்வி செய்வோம் வாருங்கள்! – இது தமிழ் வேள்வி! தமிழ்க் கேள்வி!

இந்நூல் பிப்ரவரி 1ம் தேதி உங்கள் கைகளில் தவழும்.

180.00
Quick View
Add to cart

வாழ்வு.. இறப்பு.. வாழ்வு..

ஆய்வுப்பணிகளில் தான் சந்திக்க நேர்ந்த பல்வேறு தடைகளைத் தாண்டி மானுடத்திற்கு லூயி பஸ்தேர் அளித்த அறிவியல் கொடைகள் பல.

“நுண்ணுயிரியலின் தந்தை” என்று கொண்டாடப்படும் பஸ்தேர் அவர்களின் ஆய்வின் பலனாகவே பாலுக்குப் பாதுகாப்பளிக்கும் “பாஸ்டராக்கம்” அறிமுகமானது.

பெப்ரீன் நோயின் பாதிப்பிலிருந்து பட்டு உற்பத்தி மீட்கப்பட்டது. வெறிநாய்க்கடிக்கான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. இவையெல்லாம் பஸ்தேரின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

ஆய்வுக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்த இத்தகைய அற்புத மனிதரின் வாழ்க்கையினை ஆய்வு செய்துள்ளார் எரிக் ஒர்சேனா.

180.00
Quick View
Add to cart

உல்லாசத் திருமணம்

மொராக்கோவில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் தன் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகள், அநிதிகள், திமைகள் ஆகியவை குறித்துக் கட்டற்ற சுதந்திரத்துடன் விவாதிக்கப் பொருத்தமான புனைவுக்களமான உல்லாசத் திருமணம் என்னும் இப்புதினத்தைப் படைத்திருக்கிறார்.

மூன்று தலைமுறையினை உள்ளடக்கியுள்ள இப்புதினத்தில், ஏறக்குறைய எழுபது ஆண்டு கால மொராக்கோ வரலாற்றை நடுநிலை பிறழாமல் அழகியலோடு விவரிக்கமுனையும் தஹர் பென் ஜெலூனின் சுயவாழ்க்கையும் இந்தப் புதினத்தின் காலகட்டத்தோடு பொருந்தி விடுகிறது.

இப்புதினத்தைத் தன் மகன் அமினுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதோடு மட்டுமின்றி கரிம் என்னும் பாத்திரத்தின் வடிவில் வாசகர்கள் அவனைக் காண வழி செய்கிறார் ஜெலூன். இயற்கையின் சோதனையால் நிரந்தர மழலைத் தன்மையுடன் விளங்கும் கரிமுக்கு இக்கதையினை இயக்கும் பெரும் பங்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

விடாமல் தொடரும் சமூகத் திமைகள் மிதான தன் அறிச்சிற்றத்தைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாக அமையும் இப்புதினம் வெள்ளை இருள் மிது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

300.00
Quick View
Add to cart

வியப்பூட்டும் கூபா

சோசலிசத்தை நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா.

அந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சகர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம் கண்டறிந்த முடிவுகளை எமிலி மோரிஸ் இங்கு முன்வைத்துள்ளார்.

60.00
Quick View
Add to cart

ஜீவிய சரித்திர சுருக்கம்

அநேக ஆயிரம் வருஷங்களில் மிக சொற்பமான ஐம்பது வருஷ காலத்தில் தற்போது ஆதிதிராவிடர்களென்றழைக்கப்படும் சமூகத்தவர்களடைந்த அபி விருத்தியை என் ஜீவிய சரித்திரத்தில் கண்டிருக்கிறேன். ஆதி திராவிட சமூக சரித்திரத்தில் இந்தச் சரித்திரமும் சேர்க்கப்படுமென்பது என் நோக்கம்.

இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும், இச்சமூகத்தவர் முன்னேற்றத்தை நாடி செய்து வந்திருப்பது தன்னயத்தேட்டம் என்றும், இச்சமூகத்தவர்கள் தங்கள் இடைவிடா முயற்சியால் விருத்திபெற்று வருகிறார்கள் என்றும் இச்சரித்திரத்தால் விளங்கும்.

80.00
Quick View
Add to cart

மருது / Trotsky Marudu Sketch book

Trotsky Marudu is a great Indian artist from Chennai recognized as Painter, Art Director, Animator and Special Effect Director. Making lines is his main protagonist to communicate his concepts and emotions. He also engages with colours employing strokes in dynamic gestural rhythms and movements in creating his abstracts that are invested with energy. With his experience gained right from his childhood and expertise in diverse fields, it comes as no surprise that the artist directs his lines with absolute command and confidence.

300.00
Quick View
Add to cart

தொன்முதுகுறவர்

‘கானக்குறவர்களே’ முதல் தமிழ் விவசாயிகள். ஆக, உணவு உற்பத்தியென்பது முதன்முதல் மனித சமூகத்தில் ‘பயிரிடுதல்’ என்னும் புதிய தொழில்நுட்பத்தோடு ஏற்பட்டது. இது மனித சமூகத்தில் ஏற்பட்ட இரண்டாம்கட்ட புரட்சியாகும். சங்க காலத்தில் கானக் குறவர்களின் காடெரிப்பு வேளாண்மை இருந்தால் தமிழ்ச் சமூகம் மனித குலப்படிமலர்ச்சியின் இக் கட்டத்தையும் அடைந்தது. தமிழகத்தின் தொல் – வேளாண் முறைக்கு கானக்குறவர்களே சாட்சியாகிறார்கள் என்பதை தமிழ்ச் சமூக வரலாறெழுதியலாளர்கள் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை.

150.00
Quick View
Add to cart

தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்

தமிழகத்தில் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா,சித்தா போன்ற மருத்துவ கல்வி முடித்து மருத்துவர்களாக பணியாற்றுவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே வருகின்றது.

இந்தியாவிலும்,பிற நாடுகளிலும்,இந்திய மருத்துவ முறைகளைப் பற்றிய விழிப்புணர்வும்,இந்திய மருத்துவ தாவரங்களின் நன்மைகளை பற்றியும், முன்பை விட அதிக மக்கள் புரிந்துக் கொண்டு இந்த மருந்துகளை நாடுகின்றார்கள், இதனால் இந்த மருந்துகளின் தேவை அதிகரிப்பதுடன், அதில் பயன்படுத்தப்படும் மூலிகை பொருட்களின் தேவையும்  அதிகரிக்கின்றது. மருந்துகளின் விலை கூடுவதுடன் தரமான மூலிகை பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகின்றது.

60.00
Quick View
Add to cart

தமிழர் பண்பாடும் – தத்துவமும்

பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ‘தமிழர் பண்பாடும், தத்துவமும்’ என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளில் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு, பரி பாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.

200.00
Quick View
Add to cart

இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு

பெளத்தர்களால் “தீண்டத்தகாதவர்” களாகக் கருதப்பட்ட கோயிலடிமைகளைக் கண்டபோது அதில் தலித் கண்களும் சிமிட்டுவதை உணர்ந்து 1899ஆம் ஆண்டு வெளியிட்ட இன்றைய இரங்கோனில் மினுமினுக்கும் பெளத்தச் “சுயதேக்கன் கோபுர சரித்திர” நூல் வழி “நாம் இந்துக்கள் அல்லர்” என அறிவித்த இரட்டைமலை சீனிவாசன் “இந்து மதத்தினின்று பிரித்தெடுக்கப்பட்ட” பெளத்தத்தையும் மறுத்தார்.

100.00
Quick View
Add to cart

நிலமடந்தைக்கு…

நிலமடந்தைக்கு… கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின்  இயக்க வரலாறு                 முன் மாதிரியாகப் பலரை உதாரணங்களாகச் சுட்டிக் காட்டுவது நம் அனைவருக்கும் எளிது; ஆனால், தன்னையே பலருக்கு முன்மாதிரியாக ஆக்கிக்கொள்வது

100.00
Quick View
Add to cart

தெரிந்தவன்

      கிராமம், நகரம் இரண்டிலுமே தலித்துக்கள் சாதியத்தின் பேரால்  அநியாயமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் அதிலிருந்து மீண்டெழ தலித்துகளும் இப்போது அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள் என்பதும் நிரூபணம் ஆகிக்கொண்டிருக்கிறது. ‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்கறாங்க?’ என்று எகத்தாளமாகக் கேட்கிறவர்களின் பார்வையில்தான் இவையெல்லாம் அரங்கேறுகின்றன. அவர்களின் கூற்று ஏமாற்று மொழி என்பதைத் ‘தெரிந்தவன்’ விவரிக்கிறான்.

150.00
Quick View
Add to cart

ஆன்டன் செக்காவ் – ஆகச் சிறந்த கதைகள்

இத்தொகுப்பில் உள்ள ஏதாவது ஒரு கதையினை உங்கள் விருப்பப்படி எடுத்து வாசித்துப் பாருங்கள். வாசகத் தோழமை நிறைந்த அவரது நடை, தனித்துவமான வாசிப்பு அனுபவம் ஏற்படுத்துவதை உணர்வீர்கள். சில இடங்களில் மகிழ்வீர்கள், சில இடங்களில் நெகிழ்வீர்கள். சிலர் மீது பரிவு ஏற்படும், சில அமைப்புகள் மீது சீற்றம் எழும். ஆம், காட்சிகள் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் செக்காவ் நம்மையும் அந்த நிகழ்வில் பங்கேற்கச் செய்து விடுகிறார்.

100.00
Quick View
Add to cart

பாலம்மாள் – முதல் பெண் இதழாசிரியர்

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஆண்களின் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன.  பெண்களின் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பெண் விடுதலை குறித்த எழுத்துகளில் ஆண் சிந்தனையின் ஆதிக்கம் இருக்கிறது. கல்வி, திருமண வயது, கைம்பெண் மறுமணம் எனப் பெண் விடுதலை குறித்துப் பிரித்தானிய ஏகாதிபத்திய இந்தியாவில் நடைபெற்ற விவாதங்களில் தங்கள் நிலைப்பாட்டைப் பெண்கள் எடுத்துரைத்தனர். அவர்களில் வி. பாலம்மாள் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சிந்தனைகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.

100.00
Quick View
Add to cart

தீர்ப்புகளின் காலம்

“பாறைக்கு முன்னே வந்ததும் நிதானமாய் கால்பாவி நின்றார் செல்லப்பா. அவருக்கு அனுசரணையாய் மற்றவர்களும் வந்து நின்றுகொண்டார்கள். இப்போது அந்தப் பாறையை இமைக்கொட்டாமல் அழுத்தமாய் பார்த்தார்கள். அதன்மேல் சலசலவென்று ஒசை எழுப்பிய நீரின் ஓட்டம் அந்தப் பாறையின் இடுக்கில் கிடந்து பரிதாபமாய் கதறிச் செத்த தெய்வானையின் அலறல் குரலாய் கேட்டது அவர்களுக்கு. எத்தனைக் கருக்கடையானப் பெண் தெய்வானை! பரோபகாரியும்கூட. அப்படிப்பட்ட பெண்ணை மிருகத்தனமாய் சீரழித்ததும் போதாமல் அவள் உயிரையும் எவ்வளவு கொடூரமாக உரிந்து குடித்துவிட்டிருந்தார்கள், தெற்குத்தெரு சண்டியர்கள்!”

150.00
Quick View
Add to cart

திணையியல் கோட்பாடுகள்

திணையியல் என்பது தமிழர்களின் மெய்யியலாக அதாவது இயற்கையை எவ்வாறு
நோக்குவது? எவ்வாறு அணுகுவது? என்கின்ற ஓர் அறிவுக் கோட்பாடாக இருந்துள்ளதை நாம்
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றின் வழியாகக் கண்டடைய முடியும்.

தமிழர்களின் மெய்யியல் என்பது இறைமக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதன்று, அஃது இயற்கைக் கோட்பாடான திணையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றதொரு விடுதலைக் கோட்பாடாக உள்ளது. மாந்த விடுதலையை மட்டுமன்றி ஒட்டு மொத்த உயிரின விடுதலைக்கும் அது வழிகாட்டுகிறது.

60.00
Quick View
Add to cart

மூதாய் மரம்

கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன் வேட்டைக் களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். களத்தில் தன்னைத் தற்காத்துக் கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் குடிலுக்குத் திரும்புகிறான். கடலைப் பொழுது களின், சாட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய் காணக் கற்றுக் கொண்டிருக் கிறான். இறுதி மூச்சுவரை கடலின் மாணவனாக வாழ்கிறான். ‘விழிப்புநிலை தவறிவிட்டால் பழங்குடி வாழ்வு பொருளற்றுப் போய்விடும்’.

80.00
Quick View
Add to cart

தமிழகத்தின் வருவாய்

சங்க காலம் தொடங்கி கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வருவாய் எவ்வழிகளில் எல்லாம் கிடைத்தது என்பதை இந்நூலின் வழி அறிந்து கொள்ள இயலும். பண்டைக் காலத் தமிழகத்தின் முக்கிய வருவாய் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பொருளாகும். மேலும், தமிழகத்தில் வரி வசூலிக்கப்பட்டுள்ளமை குறித்து இலக்கியங்கள். வரலாற்று ஆவணங்கள்வழி அறியமுடிகிறது. இவற்றில், எவற்றுக்கெல்லாம் வரி வசூலிக்கப்பட்டன என்பதும், எப்பெயர்களில் வரி வாங்கப்பட்டுள்ளன என்பதும் அவ்வரியின் மூலம் பெறப்பட்ட தொகை எதற்காகப் பயன்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்நூல் அமைகின்றது

250.00
Quick View
Add to cart

1000 கடல் மைல்

சுனாமியோ ஒக்கியோ பெண்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமையாக மாறுகிறது என்றால், பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு விலக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு வருவாய் ஈட்டும் வழிகள் அடைபட்டுப் போயிருக்கின்றன.

நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள பொருளாதாரத்திலிருந்து அந்நியமாக்கி கடல் மரணங்கள், கடல் படுகொலைகளில் தங்கள் ஆண்களைப் பலிகொடுத்துவிட்டு அரசுகளிடம் கையேந்தவிட்ட அரசியலை வறீதையா பேசுகிறார். சமவெளி மக்களின், அதிகார வர்க்கத்தின் மனசாட்சியைத் தொட முயற்சிக்கிறது ‘1000 கடல்மைல்’.

250.00
Quick View
Add to cart

தமிழர் பண்பாடும் தத்துவமும்

இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு, பரி பாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.

200.00
Quick View
Add to cart

பியானோ

நம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப் படாதிருக்கிற பிரச்சினைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு

180.00
Quick View
Add to cart

ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

அரசியல், சமுதாயம், வரலாறு, சமயம், இலக்கியம் ஆகிய ஐந்து பெருந்துறைகளிலும் நடந்திருந்த, நடந்து கொண்டிருந்த, நடக்கப் போகின்ற மோசடிகளையும், இருட்ட்டிப்புகளையும் இனம் கண்டு யாவர்க்கும் விளங்குமாறு எடுத்து

160.00
Quick View
Add to cart

பறையன் பாட்டு

பறையன் பாடல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் இந்நூலாசிரியர்களின் கற்பனையில் உதித்தவை அல்ல. மாறாகத் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் வைதீக சமயத்தின் புனிதநூல்களில் இடம்பெற்ற செய்திகள்தாம். எனவே இச்செய்திகள்

80.00
Quick View
Add to cart

தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்

மார்க்சியக் கோட்பாட்டாளகளான கோவை ஞானி, அ.சிவானந்தன், கா.சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சினைகளான தேசியம், பின்மார்க்சியம், சாதியம், பின் நவீனத்துவம் போன்றவை குறித்து

240.00
Quick View
Add to cart

மன்னார் கண்ணீர்க் கடல்

மன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு சமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது. பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பற்ற பெரும் முதலாளிகளிடம் சிக்கிகொண்டது. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவத் தலைமைகளும் இந்த முதலாளிகன் தரகர்களாய்க் குறுகிப்போன இச்சூழலில் திட்டமிட்ட பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுகின்றன.நடுக்கடலில் பலியிடப்படும் இந்த ஏழைப் பாரம்பரிய  மீனவர்கள் தங்களுக்கான அரசியலைக் கண்டைவது எப்போது??????.

120.00
Quick View
Add to cart

பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)

பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) – எலிசபெத் பேக்கர் (தமிழில் – வெ.ஜீவானந்தம்) : லாரி பேக்கரின் வீடுகள் தூக்கணாங் குருவிக் கூடுகள்

120.00
Quick View
Add to cart

சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

எல்லாப் பறவைகளுமே அழகானவை. மனிதகுலத்திற்குப் பலவிதங்களில் நன்மை செளிணிபவை. சிட்டுக்குருவியும் அதில் அடக்கம். எனினும் நமக்குச் சிட்டுக்குருவிகள் ஏனைய பறவைகளைவிட கொஞ்சம் உசத்திதான். சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவை சிட்டுக்குருவிகள். அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும், இரண்டு குருவிகள் சண்டையிடும்போது தங்கள் கால்களைப் பிணைத்துக்கொண்டு படபடவெனச் சிறகடித்துக் கீழே விழுவதையும் கண்டிருப்போம்.

நமது வீட்டில் கூடு கட்டி இருந்தால் குஞ்சுகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு காலையில் நாம் கண் விழித்திருப்போம். இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த

சிட்டுக்குருவி சில பகுதிகளில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில், இருந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து, பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியமாக நகரங்களின்

சில பகுதிகளில். இவை ஏன் குறைந்து போயின என்பதைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். ஓர் உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பல காலமாக, அறிவியல்பூர்வமாகக் கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் எத்தனை இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கையில் குறைந்துபோளிணிவிட்டது என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி தென்படவில்லையெனில், அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது.  நாமாக ஒரு காரணத்தை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது.

80.00
Quick View
Read more

ஃபுகுஷிமா – ஒரு பேரழிவின் கதை

நிலநடுக்கம், சுனாமி, ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்காயேல் ஃபெரியே, தன் அனுபவங்களையும், அங்கு திரட்டிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் நூல் இது. மூன்று பகுதிகளாகப் பிரிந்து விரியும் இந்த நூலின் ஆசிரியர் அரசியலும் அழகியலும் இணைந்து அசாத்தியத் துணிவுடன் நிகழ்வுகளை விவரிக்கிறார்.
இயற்கை பேரிடர்களையும் மனிதர்களே தருவித்துக்கொள்ளும் பேராபத்துக்களையும் சமூகக் கடமையோடும் இலக்கிய ரசனையோடும் அணுகும் பனுவல் இது.
நிலநடுக்கத்தால், சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களைச் சேகரித்துத் தருகிறார். துயரமும் அச்சமும் நெகிழ்ச்சியும் நிறைந்துள்ள அம்மக்களின் வாழ்நிலை நம்மை உலுக்கி விடுகிறது.
அச்சுறுத்தும் அணு உலைகளை அனுமதித்தால் மக்களின் நிம்மதி எவ்வாறு அணுஅணுவாக அவர்களுடைய அரைகுறை வாழ்வில் சூறையாடப்படுகிறது என்பதை பாதிப்புக்குள்ளானவர்களின் மொழியிலேயே பதிவு செய்கிறார். வருங்கால சமூகத்தின்பால் அக்கறை கொண்ட எவரும் தவிர்க்க இயலா விவாதப் பொருட்களை தனித்துவமானதொரு மொழியில் அலசும் இலக்கிய ஆவணம் இது.
200.00
Quick View
Add to cart