தமிழா? சம்ஸ்கிருதமா?

*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவியதே அறிவியலின் வெற்றி!

*கற்பிதம் விலக்கி, கேள்வி கேட்டுக்கேட்டுப் பரவலே தமிழ் வெற்றி ஆகட்டும்!

அந்த நோக்கில் வெளிவரும் கேள்விகளின் புத்தகமே இது! கேள்வி கேட்டோர், கேட்கின்றோர், கேட்போர் – யாவருக்கும் நனி நன்றி. கேள்வியால் வேள்வி செய்வோம் வாருங்கள்! – இது தமிழ் வேள்வி! தமிழ்க் கேள்வி!

இந்நூல் பிப்ரவரி 1ம் தேதி உங்கள் கைகளில் தவழும்.

180.00
Quick View
Add to cart

பாலம்மாள் – முதல் பெண் இதழாசிரியர்

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஆண்களின் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன.  பெண்களின் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பெண் விடுதலை குறித்த எழுத்துகளில் ஆண் சிந்தனையின் ஆதிக்கம் இருக்கிறது. கல்வி, திருமண வயது, கைம்பெண் மறுமணம் எனப் பெண் விடுதலை குறித்துப் பிரித்தானிய ஏகாதிபத்திய இந்தியாவில் நடைபெற்ற விவாதங்களில் தங்கள் நிலைப்பாட்டைப் பெண்கள் எடுத்துரைத்தனர். அவர்களில் வி. பாலம்மாள் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சிந்தனைகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.

100.00
Quick View
Add to cart

தமிழர் பண்பாடும் – தத்துவமும்

பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ‘தமிழர் பண்பாடும், தத்துவமும்’ என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளில் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு, பரி பாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.

200.00
Quick View
Add to cart

தமிழகத்தின் வருவாய்

சங்க காலம் தொடங்கி கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வருவாய் எவ்வழிகளில் எல்லாம் கிடைத்தது என்பதை இந்நூலின் வழி அறிந்து கொள்ள இயலும். பண்டைக் காலத் தமிழகத்தின் முக்கிய வருவாய் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பொருளாகும். மேலும், தமிழகத்தில் வரி வசூலிக்கப்பட்டுள்ளமை குறித்து இலக்கியங்கள். வரலாற்று ஆவணங்கள்வழி அறியமுடிகிறது. இவற்றில், எவற்றுக்கெல்லாம் வரி வசூலிக்கப்பட்டன என்பதும், எப்பெயர்களில் வரி வாங்கப்பட்டுள்ளன என்பதும் அவ்வரியின் மூலம் பெறப்பட்ட தொகை எதற்காகப் பயன்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்நூல் அமைகின்றது

250.00
Quick View
Add to cart

தமிழர் பண்பாடும் தத்துவமும்

இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. ‘பண்பாடு’ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு, பரி பாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.

200.00
Quick View
Add to cart