ஃபுகுஷிமா – ஒரு பேரழிவின் கதை

நிலநடுக்கம், சுனாமி, ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்காயேல் ஃபெரியே, தன் அனுபவங்களையும், அங்கு திரட்டிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் நூல் இது. மூன்று பகுதிகளாகப் பிரிந்து விரியும் இந்த நூலின் ஆசிரியர் அரசியலும் அழகியலும் இணைந்து அசாத்தியத் துணிவுடன் நிகழ்வுகளை விவரிக்கிறார்.
இயற்கை பேரிடர்களையும் மனிதர்களே தருவித்துக்கொள்ளும் பேராபத்துக்களையும் சமூகக் கடமையோடும் இலக்கிய ரசனையோடும் அணுகும் பனுவல் இது.
நிலநடுக்கத்தால், சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களைச் சேகரித்துத் தருகிறார். துயரமும் அச்சமும் நெகிழ்ச்சியும் நிறைந்துள்ள அம்மக்களின் வாழ்நிலை நம்மை உலுக்கி விடுகிறது.
அச்சுறுத்தும் அணு உலைகளை அனுமதித்தால் மக்களின் நிம்மதி எவ்வாறு அணுஅணுவாக அவர்களுடைய அரைகுறை வாழ்வில் சூறையாடப்படுகிறது என்பதை பாதிப்புக்குள்ளானவர்களின் மொழியிலேயே பதிவு செய்கிறார். வருங்கால சமூகத்தின்பால் அக்கறை கொண்ட எவரும் தவிர்க்க இயலா விவாதப் பொருட்களை தனித்துவமானதொரு மொழியில் அலசும் இலக்கிய ஆவணம் இது.
200.00
Quick View
Add to cart

திணையியல் கோட்பாடுகள்

திணையியல் என்பது தமிழர்களின் மெய்யியலாக அதாவது இயற்கையை எவ்வாறு
நோக்குவது? எவ்வாறு அணுகுவது? என்கின்ற ஓர் அறிவுக் கோட்பாடாக இருந்துள்ளதை நாம்
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றின் வழியாகக் கண்டடைய முடியும்.

தமிழர்களின் மெய்யியல் என்பது இறைமக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதன்று, அஃது இயற்கைக் கோட்பாடான திணையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றதொரு விடுதலைக் கோட்பாடாக உள்ளது. மாந்த விடுதலையை மட்டுமன்றி ஒட்டு மொத்த உயிரின விடுதலைக்கும் அது வழிகாட்டுகிறது.

60.00
Quick View
Add to cart

சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

எல்லாப் பறவைகளுமே அழகானவை. மனிதகுலத்திற்குப் பலவிதங்களில் நன்மை செளிணிபவை. சிட்டுக்குருவியும் அதில் அடக்கம். எனினும் நமக்குச் சிட்டுக்குருவிகள் ஏனைய பறவைகளைவிட கொஞ்சம் உசத்திதான். சிறு வயதிலிருந்து நம் வீட்டினருகிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவை சிட்டுக்குருவிகள். அவை சிறகடித்துப் பறப்பதையும், தத்தித்தத்திச் செல்வதையும், கூடு கட்ட இடம் தேடுவதையும், தானியங்களைக் கொத்திக்கொத்திச் சாப்பிடுவதையும், இரண்டு குருவிகள் சண்டையிடும்போது தங்கள் கால்களைப் பிணைத்துக்கொண்டு படபடவெனச் சிறகடித்துக் கீழே விழுவதையும் கண்டிருப்போம்.

நமது வீட்டில் கூடு கட்டி இருந்தால் குஞ்சுகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு காலையில் நாம் கண் விழித்திருப்போம். இப்படி நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த

சிட்டுக்குருவி சில பகுதிகளில் இருந்து காணாமல் போனது. இவை திடீரென ஒரே நாளில், இருந்த இடத்தைக் காலி செய்துவிட்டுப் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறைந்து, பின்பு முற்றிலுமாக அற்றுப்போயின. முக்கியமாக நகரங்களின்

சில பகுதிகளில். இவை ஏன் குறைந்து போயின என்பதைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அதன் பின்னரே தெளிவான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். ஓர் உயிரினம் குறைந்து போய்விட்டது என எப்போது சொல்ல முடியும்? பல காலமாக, அறிவியல்பூர்வமாகக் கணக்கெடுப்பு நடத்தி, முன்னொரு காலத்தில் எத்தனை இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கையில் குறைந்துபோளிணிவிட்டது என்று சொல்ல முடியும். ஆனால், நம் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி தென்படவில்லையெனில், அந்தப் பகுதியிலிருந்தே அது முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது.  நாமாக ஒரு காரணத்தை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதும் கூடாது.

80.00
Quick View
Read more